ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008
இந்தியா வல்லரசு ஆகுமா - பாகம் 2
அந்த நேரம் பார்த்து உள்ள வந்த மேலாளர்.... ஏன்டா குடுத்த வேலைய செய்யாம இங்க எங்கடா சுத்தி கிட்டு இருக்கனு சொல்லி ஆபீஸ் ரூம் அதாங்க சிவாஜி படத்துல வருமே அங்க கூட்டி கிட்டு போய்ட்டாரு... இந்தியா வல்லரசு ஆகுமா ஆகுமாநு என் கேள்வி என்ண்டயே திரும்ப திரும்ப கேட்டு கும்மி அடிச்சிட்டாரு..... அனா வளைய மக்களே.... கருதாவதாரம் சொல்லியோ... டி கடைல புரளி பேசியோ இந்தியா வல்லரசு ஆவாது..... நம்ம நம்ம வேலைய மட்டும் பர்திருந்தோம்னா இந்தியா எப்போவோ வல்லரசு ஆயிருக்கும்.... இனிமே ஆவும்னு நம்பிக்க இருக்கா என்ன.......
கருத்தாவதாரம் ...
Fletcher: Super Power..?..India?...Are you joking? man you are a Freakin Joker..aren't you?
Bush: This is a complicated question..with the vision of a new strategic partnership i would suggest them buying our F22's and signing the civilian Nuclear agreement which would emphatically give them that Status..
கிருஷ்ணவேணி பாட்டி: வல்லரசா... அதென்ன பெருமாள் பிரசாதம்னு நினைச்சியா வரிசைல நின்னோடானே கிடைகறதுக்கு ...அது பகவான் ஆண்ட வரம் வாங்கற மாதிரி ரொம்ப கஷ்ட படணும்ட அம்பி ..
பல்ராம் நாயுடு: நம்ம சிரஞ்சீவி காரு politics ல வசாறு ..இனிமேல்லு ஆந்த்ரா நாடு தமில் நாடு எல்லா நாடு வல்லரசு ஆகுது...
அவதார் சிங்: நம்ம நாடு வல்ரசு ஆக்ரத் நம்ம கைலே தான் இருக்கு...இந்த மாதிரி Blog எழுத்தே டைம் வேஸ்ட் பண்ணாமே ஒழுங்கா எல்லாரும் வேல பாக்ணும்..நன்றி ஹய்..
கலிபுலாகான்: இன்ஷா அல்லா..நம்ம வாப்பா எப்பவும் சொல்றாரு சார் இந்தியா வல்லரசு ஆகனும்னா நெறைய உற்பத்தி பண்ணனும்னு .. மே க்யா கர் ஸக்த ஹும் சாப்?.. அதான் நான் இப்பவே நெறைய பொண்ணு பாத்து வச்சுருக்கேன்...என்னால் முடுஞ்ச அளவுக்கு இந்தியாவ வல்லரசு ஆக்குவேன்...சரூர் சாப்..
ஷிங்கேன் நரஹஸி: India should face a war..war is the only way for the people to unite and be patriotic...
பூவராகவன்: ஏல இதென்ன சலூன்ல கட்டிங்கா ஷேவிங்கான்னு கேக்கது போல..இந்தியா வல்லரசாகுமான்னு கேட்டுடியே மக்கா ...அன்னா மோட்டு வளைய பாத்துட்டு முட்ட சொரிஞ்சிட்டு இருக்கான் பாரு..அவனுக்கு எல்லாம் எப்ப புத்தி வருகோ ..அன்னைக்கி இந்தியா வல்லரசா ஆகும்ல..
கோவிந்து ராமசாமி: இந்தியா வல்லரசு ஆகறது ..i wont say its impossible...Like what Aristotle told "To say of what is that it is not, or of what is not that it is, is false, while to say of what is that it is, and of what is not that it is not, is true"....நான் இந்தியா வல்லரசு ஆகாதுன்னு சொல்லல ...ஆனா நல்ல இருக்கும்னு தான் சொன்னேன்...
கொஞ்சம் அதிகமா சிந்திக்கிறோமோ...
மச்சான்... இந்தாடா டீ.
தேங்க்ஸ்டா...
டேய் எனக்கு ஒரு சந்தேகம்டா.
ஒன்ன பத்தி எங்களுக்கு தெரியும்... எதுவா இருந்தாலும் டீ சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்பறமா கேளு.
இல்ல மச்சான்... இந்தியா வல்லரசு ஆகுமாடா?
டேய் ஏன்டா இப்படியெல்லாம் சிந்திச்சி பழகறீங்க? என்னக் கொஞ்சம் புடிங்கடா. என்னமோ பண்ணுது.
இல்லடா, நம்ம நண்பர் ஒருத்தர் கேட்டுட்டாரு.
அதான பார்த்தேன்...
நாம பதில் சொல்லலேன்னா நல்லா இருக்காதுல்ல.
நீ பதில் சொன்னாலும் நல்லா இருக்காது தான். ஏன்டா ஓசி டீ வாங்கி தந்ததுக்காக நீ என்ன வேணும்னாலும் கேட்டுர்றதா? சரி மத்தவங்க என்ன சொல்றாங்க?
இன்னும் யாரும் பதில் சொல்ல ஆரம்பிக்கல. எல்லாரும் நம்மள மாதிரி தான்னு நெனைக்கறேன்.
சரி நீ என்ன நெனைக்கற?
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 2020 ல இந்தியா வல்லரசு ஆகிடும்னு சொல்லி இருக்காரே!
ஆமாண்டா அவரெல்லாம் ரொம்ப படிச்சவரு, பெரிய விஞ்ஞானி. சொன்னா சரியா தான் இருக்கும். அதையே நீயும் சொல்லிடு.
ஆனா NASA விஞ்ஞானிகள்லாம் 2019 ல ஒரு பெரிய விண்கல் பூமில விழுந்து உயிரினம்லாம் அழிஞ்சிடும்னு சொல்றாங்களே!
அப்படியா ? அது கூட உண்மையா இருக்கலாம் அவங்களும் படிச்சவங்க தான.
ஆனா இந்த நாஸ்ட்ராடமஸ் னு ஒருத்தர் 2016 க்கு அப்புறம் இந்தியா தான் வல்லரசுன்னு 500 வருஷத்துக்கு முன்னாலேயே அடிச்சு சொல்லி இருக்காரே!
ஓஹோ... அவர் பெரிய ஆளாச்சே.
ஆமா... ஆனா ஒரு சில பொருளாதார வல்லுனர்கள் 2015 ல சீனா தான்னு சொல்றாங்க.
டேய் வேண்டாண்டா... டீக்கு வேணும்னா என்னோட அக்கவுண்ட்ல எழுதிக்கோ. முடியல.
இருந்தாலும் இந்த போரிஸ்கா னு ஒரு செவ்வாய் கிரகத்து பையன் சொல்றத பார்த்தா 2012 லேயே ஒரு பெரிய இயற்கை பேரழிவு இருக்கும் போல தெரியுதே!
தப்புதாண்டா... இந்த ஒரு தடவ மன்னிச்சி விட்டுடேன்...
அதுக்கில்ல மச்சான் நம்ம சிதம்பரம் என்ன சொல்றார்னா 2010ல...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
சனி, 30 ஆகஸ்ட், 2008
இந்தியா வல்லரசு ஆகுமா !!!!
இந்தியா வல்லரசு அகுமான்னா... ஆகும்... ஆகாதான்னா ஆகாது....
இது ரொம்ப சிரமமான கேள்வியா இருகுரதுநால உன்னதமா பணி புரியுற நம்ம சாப் காங்சுல்டன்ட் கான்ச்ஸல்ட் பண்ணினோம்...
முதல்ல நம்ம டோங்க்ரி தல, பொருட்கள் மேலாண்மை பிரிவு அதாங்க நம்ம இது... புரியளனா விடுங்க..... என்ன சொன்னருன்னா .... அதாவது சுமார் ௨௫ வருடங்களுக்கு முன்பாக அவரு சாப் ல வேல பர்தப்பைல இருந்து இத தன் சொல்றாங்க ஆனா இன்னும் ஆகல.... (ரொம்ப வருத்த படுராருய்யா)...அதுமட்டும் இல்லாம இந்தியா வல்லரசு ஆகுறதுக்கு சில குறிப்பு குடுத்தாரு.... அத கேட்குறதுக்கு இந்தியா வல்லரசு ஆகமலே இருக்கலாம்னு தோநுது.
சரி இவரு தன் இப்படி சொல்லிட்டாரு நம்ம கல்லாபெட்டி சுந்தரம்.. ஆதங்க நம்ம விற்பனை பிரிவு ஆளு .... அவர்ட கேட்டா .... குரங்கு குட்டி மாதிரி மூஞ்ச வெச்சிகிட்டு ஒரு கேள்வி கேட்டாரு.... அதுல எல்லாமே அடக்கம்னா பர்துகொங்களேன்.... நமக்கு என் இது தோனல நு எல்லாரும் பொறாமை படுற அளவுக்கு இருந்துச்சு அந்த கேள்வி... வல்லரசுன்னா ??
சரி இதுக்கெல்லாம் சரியான ஆளு , உற்பத்தி பிரிவ சேர்ந்தவரு, நல்லவரு, வல்லவரு நம்ம மாம்ஸ் கெட்ட "What shall I say?" இங்கிலீஷ் , நம்ம கிட்ட.. போய யோவ்...
அட என்னடா இது, இப்படி ஆயிடுச்சே, தரத்தை கக்கும் ஆண்டவர் கிட்ட கேட்போம்னா , அவரு நம்மள ஊறுகாய் ஆக்கி , கூட வேல பாக்குற பாபாவ தொலைபேசில தொடர்பு கொண்டு கடலைய அரம்பிச்சிடாறு.. என்ன கொடுமை சார் இது....
இதுக்கு நடுவுல சும்மா போறவன் ஒருத்தன் என்ன நடக்குதுன்னே தெரியாம நம்ம விஜயகாந்தே வல்லரசு ஆகும் பொது இந்தியா என் அக கூடாதுன்னு கேட்குரார்....
இன்னிக்கி இவ்ளோ போதும் மீதி கும்மிய நாளைக்கு அடிப்போம்னு தண்ணிய குடிக்க ஓடிட்டேன்...
வல்லரசு ஆகுமா இந்தியா....?
உங்கள் பதில்.....
ஆம் ....என்றால் ஏன் ?...
இல்லை....என்றால் ஏன் ?...
காரசாரமான விவாதத்தை ஆரம்பிங்க....
கருத்துகளை நறுக்கு தெறித்த மாதிரி அனுப்புங்க...
புதன், 27 ஆகஸ்ட், 2008
சத்யம் - திரை விமர்சனம்
http://www.geocities.com/kracker2000in/index.html
கும்மாளத்திற்கு நன்றி .......
என் இனிய வலைய மக்களே.....!
கும்மாளம் மூலமாக உங்களுக்கு கருத்துக்களை அள்ளி கொட்ட புறப்படுங்கள்...
கும்மாளம்......
கும்மாளம்......இது சும்மா கும்மாங்குத்து போட்டு கூட்டஞ்சோறு செய்வது இல்ல...
கும்மிருட்ல குட்டியா ஒரு தீபொறி இருந்தாலும் குபீர்ர்ர்...னு... கண்ணுக்கு தெரியும்ல அதுபோல...
குருடர்களுக்கு கைதடியை போல மன குருடர்களின் கண் திறக்கும் ஒரு குருட்டு முயற்சி....
கும்முன்னு உங்கள் கருத்துக்களை குதற இல்ல..சிதற விடுங்க......
குளிர்ச்சியாய் சிலிர்கட்டும் வலையர்கள் குஷியாக .....
குமுறி...ச்சீ.....கும்பிட்டு கேட்கும் உங்கள்.......
தியாகு......
Note: (வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைல் ல படிக்கவும் )
செவ்வாய், 26 ஆகஸ்ட், 2008
May be this is the first on without fun!!!
Hope you will have a nice time in reading this blog here after...
With all your support and contribution!!
Kummalam poduvomgo!!