புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

சனி, 13 ஜூன், 2009

செய்தியும் சேதமும்:

இன்றைய கால கட்டத்துல இன்பர்மேஸன் டெக்னாலஜி ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கைல கூட தாக்கத்த ஏற்படுத்துது... தொலைகாட்சி ல ஆரம்பிச்சு செல் போன் வரைக்கும். ஆனா இதை ரொம்ப தவறா பயன் படுத்துறாங்க... சில நாட்களுக்கு முன் நானும் என் நண்பர்களும் தொலைக்காட்சியில செய்திகள் கேட்டுகிட்டு இருக்கும் பொது, பாகிஸ்தான் ல குண்டு வெடிச்ச செய்திய காட்டிகிட்டு இருந்தாங்க..தொடர்ந்து பார்த்துகிட்டு இருந்த நாங்க, அந்த செய்தி நிருபர், பாகிஸ்தான்ல உள்ள ஒரு மற்றொரு செய்தி நிருபர தொடர்பு கொண்டு பேசினாங்க... சரி ஆறுதல் சொல்ல போறாங்க போலனு தொடர்ந்து பார்த்தா ,, " இந்த குண்டு வெடிப்புக்கு யார காரணம்னு நீங்க நினகிரீங்கனு ஒரு கேள்வி" அதுக்கு அந்த நபர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், " இந்திய தான் வேற யாருன்னு சொல்லிட்டாரு" அதோட நிறுத்தினாரா.. " பாகிஸ்தான் ல நடக்குற எல்லா நாச வேலைகளுக்கும் இந்தியா தான் காரணம்னு ஆணித்தனமா அடிச்சு சொல்றாரு... அதுக்கு பாகிஸ்தான் தக்க பதிலடி குடுக்கும்னும் சொல்றாரு... இது நமக்கு தேவையா? சும்மா இருக்க சங்க ஊதி கெடுத்தான் ஆண்டிங்கற மாதிரி சும்மா இருக்க அவங்கள சொறிஞ்சு விட்டு இந்தியாவையே அசிங்க படுத்துறது..... மக்களே நீங்க வேணும்னா நல்ல கவனிச்சு பாருங்க.. அந்த தொலைகாட்சி ஓட வருமந்த பெருக்க ஒரு சின்ன விசயத்த ஊதி ஊதி பெருசக்குறதும்.. ஒரு ஆழ கட்டம் கட்டி அசிங்க படுத்துறது.. என்ன கேள்வி கேட்குறோம், எந்த சமயத்துல கேட்குரோம்னு தெரியாம கேட்டு நம்ம எல்லாரையும் ஆசிக படுதுரதுவுமே வேலைய போச்சு..... இந்த பொழப்பு தேவையா.... அந்த தொலைகாட்சி வேற எதுவும் இல்ல NDTV , செய்தியாளர் Barkha Datt .... வெட்கக்கேடு..

செவ்வாய், 9 ஜூன், 2009

அசிங்கப்பட்டான் ஆஸ்திரேலியன்

செந்தில் : என்ன அன்னே ஆஸ்திரேலியா இப்படி தோத்து போயிடுச்சு நேத்தி? கௌண்டர் : ஆமா இப்படித்தான் தோக்கனும்.. வேற எப்படி தோக்கனும்..??செந்தில் : அதில்லனே ஆஸ்திரேலியா ஒரு நல்ல டீம் ஆச்சே அதனால கேட்டேன்..
கௌண்டர் : அதெல்லாம் நல்ல ஆட்டகாரங்க இருக்கும் பொது ஜெயிச்சாங்க டா..
செந்தில் : ஆட்ட காரங்களோ பாட்ட காரங்களோ... ஆஸ்திரேலியா தோத்து போயிடுச்சு நே..
கௌண்டர் : யாரு ரியில்ல ஆள அடிக்கிறவன், ஸ்க்ரூ ட்ரிவேர்ல ஆள குதுரவநெல்லாம் ஆட்ட காரணா... ஆட்டோ காரன் கூட ஆகா முடியாது... செந்தில் : அது ஏதோ தெரியாம நடந்து போச்சுன்னே..
கௌண்டர் : ஒக்காளி ஸ்க்ரூ ட்ரிவேர்ல தெரியாம குத்தீடாங்களா? அங்க இருக்குறவன் பூரா உன்ன மாதிரி மண்ட கணம் புடிச்சவனுங்க டா...
செந்தில் : அண்ணே அது ஸ்டூடன்ட்ஸ் குள்ள பிரச்சனை நம்ம தல இட கூடதுன்னே..
கௌண்டர் : டேய் கோமுட்டி தலயா.. ஊரு பூரா உன்ன மாதிரி தேங்க திருடுற கோஷ்டி இருக்க வரைக்கும் இது முடியவே முடியாது..
செந்தில் : அண்ணே அவங்கலாம் எச்சுகேடெட் பேமிலி ...
கௌண்டர் : டேய் ஓடி போய்டு, இல்லனா உனக்கு ஒரு குத்து... ஓவரா பேசுன பாண்டிங்கு ஒரு குத்து வாய்லையே குத்துவேன்.. ஒக்காளி இவனெல்லாம் கிரிக்கெட் பத்தி பேசுறன்.. அப்படி இருக்கு நம்ம பொழப்பு...

(தெறித்து ஓடினார் செந்தில் )

செவ்வாய், 21 அக்டோபர், 2008

ஐ.டீ படித்துறை பாண்டி

காட்சி : 1 இடம் : பிராஜக்ட் சைட்
வழக்கம் போல எல்லா டீம் ஆளுங்களும் காலைல வந்ததும் மெயில் செக் பண்றது, ஷேர் மார்க்கெட் பாக்கறது, மார்க்கெட் நிலவரத்தை ரெம்ப டீப்பா டிஸ்கஸ் பண்றது, டீ குடிக்கறது, டீ குடிக்கற மத்தவங்கள கடிக்கிறது, டிஸ்கசன் பண்றேன்னு கும்பலா ரூம்ல கதவ சாத்திட்டு தூங்கறதுனு ரெம்ப ரெம்ப பிசியா இருப்பாங்க.
ஒரு சிலர் ஸ்க்ரீன்ல வெறிச்சு பார்த்திட்டு வேகமா டைப் பண்ணிட்டு இருப்பாங்க கிட்ட போய் பார்த்தா வேற என்ன சாட் தான்......இப்படியே டைம் பாஸ் பண்ணிட்டு ஒரு மூணு மணி வாக்குல தான் பாதி பேரு சுய நினைவுக்கு வருவாங்க மீதி பேரு தூக்கத்த விட்டு எழும்புவாங்க. .......ச்சே வொர்க்லொட் ரொம்ப ஜாஸ்தி..... ஐ.டீ ல வேலை பாக்கறது ரொம்ப டென்ஷன் பானு ஓவரா சலிச்சிக்குவாங்க.....

கட்சி : 2 நேரம் : ஆபிஸ் முடியும் நேரம்.
டீம் லீட் டீம் மெம்பெர்களை கூப்பிடுறாரு.......கைஸ்...வி வில் மீட் அட் 4.30

டீம் லீட் : வாட் ஹெபன்ட் டு தோஸ் டெவலப்மன்ட்ட்ஸ் ? (டீம் வழக்கம் போல முழிக்கிறார்கள் )
டீம் லீட் : ஓகே கம் வித் மீ ...( சொல்லிட்டு ரூம் விட்டு வெளிய வந்து பார்க்கிறார்)
(வெளியே ஒரு டெவலப்பர் உக்காந்து வேலை பாத்துட்டு இருக்கார்)
ஹே யு..... அவன்கிட்ட போய் ஒரு டெவலப்மன்ட் பண்ணனும்னு சொல்லிட்டு வா....
டீம் மெம்பர் : (டெவலப்பர் கிட்ட போய்) ஹாய்... சார் ஒரு டெவலப்மன்ட் பண்ண சொல்லறார்.
டெவ் : ஹே போப்பா எப்போ வந்து கேக்கற பண்ண முடியாது....
டீம் மெம்: சார் அவரு பண்ணமாட்டேன்னு சொல்லறார்.
டீம் லீட்: நான் சொன்னேன்னு சொன்னாயா ?
டீம் மெம் : (டெவலப்பர் கிட்ட போய் ) சார் பண்ண சொல்லறாரு பா
டெவ்: அவங்க அப்பன் வந்தாலும் பண்ண மாட்டேன்.

( டீம் லீட் டென்ஷன் ஆகி டெவலப்பர் கிட்ட வேகமா வந்து )
டீம் லீட் : நான் யாருன்னு தெரியும் ல....... டீம் லீட் யு நோ.....
டெவ்: டீம் லீட் எல்லாம் தெரியாது..... பங்க்சனல் ஸ்பெக் கொடுங்க.....அப்பத்தான் யாரா இருந்தாலும் டெவலப்மன்ட் பண்ணுவேன்....
டீம் லீட் : அய்யோக்கிய பயலே.....யாரை பார்த்து பங்க்சனல் ஸ்பெக் கேக்குற... நான் வாழ்க்கைல பங்க்சனல் ஸ்பெக் யாருக்கும் கொடுத்ததில்ல அப்படி கொடுத்தாலும் அதைவச்சு இதுவரைக்கும் டெவலப்மன்ட் எதுவும் நடந்ததில்ல....என்ன பார்த்து என்ன கேள்வி கேட்டுட்ட பிச்சு புடுவேன் பிச்சு.....ராஸ்கல்......
(என்று திட்டியபடி வேகமாக ரூம்க்கு போகிறார் பின்னால டீம் மெம்பர்ஸ் போறாங்க )
டீம் மெம்: என்ன சார் நீங்க அவன பண்ண வச்சுடுவிங்கனு பார்த்தோம் ஆனா இப்படி ஓடி வந்துட்டிங்க....
டீம் லீட்: இப்படி பப்ளிக்கா அவங்க கிட்ட பேசி பேசி அசிங்கப்பட்டது போதும்... டேய் இப்போ என்ன பண்றீங்க மெதுவா எட்டி பாருங்க.... அவன் லேப்டாப் ஓபன் பண்ணி வொர்க் பண்ண ஆரம்பிச்சான்னா அவன் நமக்கு அடிமை.......... மிட் நைட் வரைக்கும் அவன யூஸ் பண்ணிக்கலாம்.....இல்ல அவன் லேப்டாப் க்ளோஸ் பண்ணிட்டு கிளம்பினான்னா நாம அவனுக்கு அடிமை ...... போய் மொத்தமா கால்ல கைல உலுந்து அவனை கெஞ்ச வேண்டியதுதான்... ....
டீம் மெம்: இது உங்க ஆட்டைல புது ஆட்டையா இருக்கே சார்.......
டீம் லீட்: அதனால தான் நான் டீம் லீட்ஆ இருக்கேன் நீங்க எல்லாம் மெம்பரா எங்கிட்ட இருக்கீங்க போய் பாருங்க......
(டீம் வெளியே எட்டி பார்க்க டெவலப்பர் கடைய சாத்திட்டு கிளம்பிட்டு இருக்கறார் )
டீம் மெம்: சார் நீங்க சொன்ன மாதிரி அவன் கிளம்பிட்டான் சார்.....
டீம் லீட்: ஓடுங்க ஓடுங்க.... அவன உடாதிங்க.... எடுடா அந்த பொரைய.......பொரையும் ஒரு டீயும் கொடுத்து அவன மடக்குங்க.... ஓடுங்க.......
( டீம் லீட் சொல்லிக்கொண்டு டெவல்ப்பரை நோக்கி ஓட பின்னால் டீம் மெம்பெர்ஸ் ஆர் ஆல்சோ பாலோயிங்...... ஆஸ் யூசுவல்......)


இன்னும் வரும்.................. ஆனா........

திங்கள், 20 அக்டோபர், 2008

டென்ஷன் ஆன டெண்டுல்கர்

ரஞ்சி திரோபதியில் விளையாட காத்திருக்கும் விளையாட்டு வீரன் சச்சினை பார்த்தால்.. என்ன பேசுவாரு?


நம்மவர்(இளம் வீரர்): நிறுத்தனும்
சச்சின் : எத?
நம்மவர்(இளம் வீரர்): கிரிக்கெட் விளையாடுறத.
சச்சின் : ஏன்?
நம்மவர்(இளம் வீரர்): நான் விளையாடனும்.
சச்சின் : சரி போய் விளையாடு..
நம்மவர்(இளம் வீரர்): இந்தியா நாட்டுக்காக விளையாடனும்.
சச்சின் : இரு இருபது வருஷம் வெயிட் பண்ணு நான் ரிட்டயர்ட் ஆயிடுறேன்.
நம்மவர்(இளம் வீரர்): அப்போ நான் ரிட்டயர்ட் ஆயிடுவேன்
சச்சின் : என்ன என்னா பன்ன சொல்ற?
நம்மவர்(இளம் வீரர்): போதும்!
சச்சின் : என்ன போதும்!!
நம்மவர்(இளம் வீரர்): நீ பன்ன ரெகார்ட் லாம் போதும்..
சச்சின் : என் பொண்டாட்டி அடிப்பா.
நம்மவர்(இளம் வீரர்): அப்போ உன்னவிட வயசுல சின்ன பொண்ண பார்த்து கட்டி இருக்கணும்.
சச்சின் : முயற்சி பண்றேன்.. !!
நம்மவர்(இளம் வீரர்): அவங்கள போக சொல்லு!
சச்சின் : எவங்கள ?
நம்மவர்(இளம் வீரர்): பையனா டீம் ல சேந்து, அங்கிளா அசிங்க பட்டு, தாத்தாவ இருக்காங்களே உன் டீம்ல அவங்கள..
சச்சின் : அவங்கள்ட போய் நான் ஏன் சொல்லணும்.?.
(எங்க கிட்டயேவா)
நம்மவர்(இளம் வீரர்): என்ன சொல்லணும்?
சச்சின் : அவங்க கிட்ட போய்.. !@#!
நம்மவர்(இளம் வீரர்): என்ன அவங்க கிட்ட போய்..?
சச்சின் : டீம் பத்தி பேச வேணாமா?
நம்மவர்(இளம் வீரர்): என்ன டீம் பத்தி?
சச்சின் : என்ன விற்று நான் பார்த்துக்குவேன்..
நம்மவர்(இளம் வீரர்): என்ன என்ன விற்று?
சச்சின் : சரி சிக்ஸர் அடிசிருகிய?
நம்மவர்(இளம் வீரர்): என்ன சிக்ஸர் அடிசிருகிய?


இப்போ அவுரண்டா அவன் ரிட்டயர்ட்...

ஞாயிறு, 19 அக்டோபர், 2008

கூகிள் என்றால் என்ன ?

"Googol" is the mathematical term for a 1 followed by 100 zeros.
கூகிள் பெயர் காரணம் - கூகோல் என்றால் ஒன்றுக்கு பிறகு நூறு பூசியங்களை கொண்ட எண்ணை குறிக்கும்.
கூகிள் தேடுதலுக்கு சரியான பேருதான் வச்சிருக்காங்க இல்லையா ?

புதன், 15 அக்டோபர், 2008

குஷ்பு பிறந்த நாள் - தேசிய விடுமுறை




பிறந்த தேதி : செப்டம்பர் 29, 1970 : திரையுலகில் எத்தனையோ கதாநாயகிகள், கவர்ச்சிக் கன்னிகள் வந்துபோனாலும் தமிழ் ரசிகர்கள் கோயில் கட்டியது குஷ்புவுக்கு மட்டும்தான்.



'வருஷம் 16'ல் தொடங்கி பல வருஷங்கள் தமிழ் படவுலகில் 'நம்பர்-1' நாயகியாக திகழ்ந்த இவர், தற்போது சின்னத்திரையில் ரொம்ப பிஸி. திரையுலகில் கனவுக்கன்னி யாக பல பேர் பேர் தூக்கத்தை கெடுத்து ...... சின்னத்திரையில் உண்மையிலேயே வீட்டில் இருப்போரை தூக்கத்தை கெடுத்து சாதனை புரிந்த குஷ்பு பிறந்தநாளை அடுத்த வருடம் தேசிய விடுமுறையாக அறிவிக்கும்படி .... எல்லோரும் பிரதமருக்கு தந்தி அனுப்பும்படி கேட்டுகொள்கிறோம்......



இப்படிக்கு



கும்மாளம் குஷ்பு பேரவை.



மானாட மயிலாட குஷ்பு & ரம்பா ஜொள்ளு சேவா சங்கம்.





செவ்வாய், 14 அக்டோபர், 2008

மேதை படத்தின் கதை சுருக்கம்......

ராமராஜன் இந்த படத்தில் இன் அண்ட் ஆஸ் மேதையாக நடிக்கிறார் இல்லை வாழ்கிறார்......
மேதை ஒரு குக் குக் கிராமத்தில் பிறந்து வளர்கிறார்......அவருடைய அறிவை கண்டு சுத்துப்பட்டு பதினெட்டு கிராமங்களும் வியக்கிறது..... அவருக்கு பதினெட்டு வயதாகும் போது அவரே ஊரில் ஒரு கல்லூரி அமைக்கிறார்.... அவர் தான் பிரின்சிபல், புரொபஸர், எல்லாம்..... ஓய்வு நேரத்தில் கல்லூரி ஆய்வு கூடத்தில் அராய்ச்சி செய்து ஒரு புதிய பொருளை கண்டுபிடிக்கிறார்.....
இதற்கு இடையே முதலாண்டு படிக்கும் குப்பம்மா, குருவம்மா, போன்ற அழகிகள் அவரை லவ் பண்ணுகிறார்கள்.....


ரெண்டு குத்து சாங்க்ஸ்......

ஆனால் மேதை பக்கத்து ஊரு நாட்டமை பொண்ணை (நைன்த் பெயில்) காதலிக்கிறார்.... பக்கத்து ஊரு நாட்டாமை மகனும் இவரை போலவே கல்லூரி ஆரம்பித்து போட்டி போடுகிறார் ...இவரது கண்டுபிடிப்பு பார்முலாவை திருடி கொண்டு பிச்சாவரத்துக்கு ஓடுகிறார்.....

நாலு பைட் ........

கப்பல், விமானம், ராக்கெட் சேசிங் சீன்ஸ் உண்டு.

அதை வில்லன் இடமிருந்து கைப்பற்றி மேதை தன்னுடைய கண்டுபிடிப்பை ஐ.நா சபையில் நிருபித்து காட்ட ஜெனிவா போகிறார் அங்கே காட்டெருமை இவரை விபத்தில் இருந்து காப்பற்றுகிறது... இங்க ஒரு சாங்.....(பேச்சி...பேச்சி என் எருமை உள்ள பேச்சி .....வாடி வாடி .....காட்டெருமை பேச்சி) பிறகு .......

ஐ.நா சபையில் கண்டுபிடிப்பை ஓபன் செய்கிறார்........ அனைத்து நாட்டு அறிஞர்களும் ஆச்சரியத்தில் வையடைத்து போகிறார்கள்..... அப்போது திடீரென்று இண்டேர்போல் போலீஸ் வந்து மேதையை கைது செய்கிறது......(எதற்கு என்று கிளைமாக்ஸ்ல தான் தெரியும்)
ஜெயிலிலும் அவர் தன் ஆராய்ச்சியை தொடர்கிறார்......

அதற்காக கிருஷ்ணா புராணம், ராமாயணம், மகா பரதம், கந்த சஷ்டி கவசம், மருதம், சரோஜா போன்ற அறிவியல் நூல்களை அட்டை டூ அட்டை படிக்கிறார்......
அவர் ஜெயிலிலிருப்பதை கேள்விப்பட்டு ஊரு நாட்டாமை பதினெட்டு பட்டி மக்கள், முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உட்பட எல்லாரும் கூடி உண்ணாவிரதம் இருக்கிறார்கள்...............
இங்கே உலகையே உருக்குற மாதிரி ஒரு தீம் மியூசிக் தினா போட்டுருக்கிறார்

( இதற்க்கு அவருக்கு கண்டிப்பா ஆஸ்கார், மாருதி கார், எல்லாம் கிடைக்கும் )
கிளைமாக்ஸ் காட்சியில் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க இண்டேர்போல் அவரை விடுதலை செய்ய...

"வாங்கையா மேதை அய்யா ...........

உங்க வலி பார்த்து நின்றோம் அய்யா...... "

என்று மக்கள் பாட்டு பாட தியேட்டரில் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டுவார்கள்...... (தாய் குலங்களின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் ஓடும்)
அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஜெயிலில் தள்ளிய கண்டுபிடிப்பு தான் என்ன என்று மேதையை கேட்க பெட்டியை திறந்து அதை வெளியே எடுத்துகாட்ட ............ அவர் காட்டியது வேறொன்றும் இல்லை.....'மௌஸ்' (எலி)....... இந்த கருவியை பயன்படுத்தி கீ போர்டு இல்லாமல் மௌஸ் பாடில்... அதன் மூஞ்சியை தேய்த்தால் கர்சர் நகரும் என்ற கண்டிபிடிப்பை......... பார்த்து பொறாமை பட்டு அமெரிக்காவின் சதியால் என்னை ஜெயிலில் அடைத்தார்கள்.... என்று சொல்ல.......முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உட்பட எல்லாரும் மயங்கி போகிறார்கள்.......
இந்த மாபெரும் சயன்ஸ் பிக்க்ஷன் படத்துக்கு கண்டிப்பாக நோபல் பரிசு கிடைக்கும் என்று வெளிநாட்டு தூதுவர் ரகசிய தகவல் சொன்னதாக மேதை ராமராஜன் எருமையுடன் ச்சே....பெருமையுடன் கூறினார்.
பின் குறிப்பு : இது வெறும் கதை சுருக்கமே முழு கதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அல்லது தைரியம் உள்ளவர்கள் வெள்ளி திரையில் காண்க .


முன் எச்சரிக்கை : இந்த படம் ரிலீஸ் ஆனால் ராமராஜன் தேர்தலில் போட்டியிட்டு முதல்வர் ஆகக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சின்னாளபட்டி சிட்டு குருவி ஜோஷியர் கூறியிருப்பதாக ராமராஜன் அகில உலக ரசிகர் மன்ற செயலாளர் அரைக்கால் டவுசர் அப்புசாமி பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி நான் வர முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்க முடியாது.......


"நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

அப்படி நான் வர முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்க முடியாது.....! "

எப்படி பன்ச் டயலாக் நல்லாருக்கா ? இது அரசியலுக்கு வரவழைக்க முயற்சித்து ரசிகர்கள் செய்த அடாவடி கூத்துகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தலைவர் கொடுத்த பன்ச் டயலாக் ஆச்சே.........
அண்ணே..... ரசிகர்கள் அப்படி என்ன அடாவடி செஞ்சாங்க ?
என்ன சும்மா.....லட்ச கணக்குல கை காச போட்டு

<>அவரு பெயரில் கட்சி.

<>கட்சிக்கு கொடி, சின்னம்.

<>தமிழ் நாடு முழுவதும் போஸ்டர்.


இப்படி சின்னதா(!?) தலைவருக்கு அவங்க ஆர்வத்த காட்டினாங்க.....


இதெல்லாம் ஒரு நாளோ இல்ல ஒரு வாரத்திலோ முடியற மேட்டர் இல்லையே...


ஆமாடா.....ஆனா.......இவ்வளவு நடந்து முடியற வரைக்கும் தலைவருக்கு எதுவுமே தெரியாது பாவம்.......


பின்ன அவருதான் வெளி நாட்டுல 'ஐஸ்' போட்டு ஜூஸ் குடிச்சிட்டு எந்திரத்தனமா சூட்டிங் ல பிசியா இருக்காரே.........


ரசிகர்களை மீட் பண்றேன் மீட் பண்றேன்னு சொல்லிட்டு அவரு பாட்டுக்கு அவரு வயித்து பொழப்ப பாக்கறாரு.....இந்த பொழப்பத்த அப்பாவிங்க அவர நம்பி என்ன என்னமோ கனவு கண்டுட்டு இருக்காய்ங்க......(எல்லாம் அவனவன் ஆட்டைய போடத்தான்)...


அவரு எப்போ மீட் பண்றேன்னு சொன்னாரு...... இதுக்கு முன்னால எடுத்த படம் கும்ம்னு குத்தவச்சு..குப்ரடிச்சி கும்மியாடிசிடுச்சி இல்ல......அதனால ரசிகர்கள உற்ச்சாகபடுத்த அப்படி சொன்னாரு அதபோய் தப்பா எடுத்திட்டு இப்படி பண்ணலாமா? ( அடுத்த படத்துக்கு பாலு ஊத்தணும் இல்ல)

இருந்தாலும் அவரு அரசியலுக்கு வர்றதபத்தி மறுபடியும் குழப்பக் கூடாது......

டேய் லொள்ளு தலையா.....நீ என்ன குட்டையா குழப்பறதுக்கு...... அவரு உன்ன என்னடா கொழப்பிட்டாரு ?

இல்லண்ணே.....ஒண்ணு வரேன்னு சொல்லணும் இல்ல வரலைன்னு சொல்லணும்.... இப்படி ரெண்டுங்கெட்டானா பன்ச் டயலாக் சொன்னா நாங்க எல்லாம் என்ன பண்றது... ?


ம்ம்ம்....ரெண்டு இட்லியும் கொஞ்சம் கெட்டி சட்னியும் வச்சு தின்னு........ அவங்க அவங்களுக்குன்னு சுயமா சிந்திக்க செயல்பட உரிமை இருக்குல்ல..... அவரு சிந்திக்கிறாரு அவரு தெளிவா இருக்காரு........ உனக்கெல்லாம் எப்பதான் அறிவு வருமோ....!!! அவரு கொளப்பறார்.....அவரு கொளப்பறார்....என்று....கூப்பாடு போடற உன்னமாதிரி மடையனுங்க எப்பதான் திருந்தி இருக்கறவங்கள கொளப்பாம இருக்கபோறீங்க.......


தமிழ் நாட்ட அவரு அரசியலுக்கு வந்தாதான் காப்பத்த முடியுமா? இல்ல தமிழ் நாட்ட நடிகர்கள் மட்டும் தான் காப்பத்த முடியுமா....என்னடா இது கேனத்தனமா இருக்கு.......

சினிமா ஒரு தொழில் தானடா..... நீ டீ கடைல வேலை பாக்கிறா மாதிரி, ஸ்கூல் ல வாத்தியார் வேலை பாக்கற மாதிரி, கூலி வேலை பாக்கற மாதிரி அதுவும் ஒரு வேலை தானடா..... நீ ஒரு கூலி தொழிலாளியை அரசியலுக்கு கூப்பிடுவியா? வாத்தியாரை அரசியலுக்கு கூப்பிடுவியா? சரி.....இவரு ஆட்சிக்கு வந்தா பட்ஜெட் எப்படி போடுவாரு, திட்டம்னா என்னன்னு தெரியுமா? ......


அதெல்லாம் அதிகாரிகள் போடுவாங்கன்னே.........

அப்போ இவரு என்ன பண்ணுவாரு அவங்களுக்கு விளக்கு பிடிப்பாரா? அதுக்கு ஏண்டா அவரு வரணும் .....நான் , நீ, இந்த நாட்டுல இருக்குற யாரு வேனாலும் வரலாமே......


அடுத்த தலைமுறையாவது திருந்தட்டும்டா.......... பல நாடுகள்ல சினிமாவே இல்லை....அதனால அங்கே அரசியலே நடக்கறதில்லையா? இல்ல அங்கெல்லாம் நல்லாட்சி நடக்கலையா?


போயி....பொழப்ப பாருங்கடா......குழந்தை குட்டிகள படிக்கவைங்கடா......குடும்பத்த மொதல்ல காப்பத்த முயற்சி பண்ணுங்க அப்புறம் நாடு, நடிகர்களை எல்லாம் பார்க்கலாம்........


வாழ்க தமிழ்.....

ஜெய்ஹிந்த்.....

இந்த மானம் கெட்ட முதுகெலும்பு இல்லாத கிரிகெட் டீம் தேவையா.........

இதை போல ஒரு கேவலமான ஆட்டத்தை பார்க்க முடியாது........ இருநூத்தி தொன்னூத்தி ஒம்பது ஒரு கடினமான இலக்கா.....அப்போ ஐம்பது ரன் இலக்காக இருந்தால் ஜெயிதிருபார்களா........
இதில் கவாஸ்கர் பெருமை வேறு.......
டெண்டுல்கர் மேட்ச் வெற்றிக்காக ஆடினாரா? அவருடைய சாதனைக்காக ஆடினார்.....ஆட்டம் இழந்த பொது அவரின் முகத்தை பார்த்திருந்தால் நன்றாக புரியும்..... இதுவே அணி தோல்வி அடைந்திருந்தா கூட அப்படி கவலை பட்டிருக்க மாட்டார்.....

ஆட்ட இறுதியில் பாண்டிங் சொன்னது போல இந்தியா வெற்றிக்காக ஆடவில்லை....டிரா செய்யத்தான் ஆடினார்கள்....."நெகடிவ் திங்க்கிங்" என்று அவர் சொன்னது நூறு சதம் உண்மை........

இந்த மானம் கெட்ட முதுகெலும்பு இல்லாத கிரிகெட் டீம் தேவையா.........
ஏன் எல்லோரையும் தூக்கி எறிந்துவிட்டு உண்மையிலேயே விளையாடுபவர்களை டீம் ல சேர்க்க வக்கில்லையா..... கங்குலி எப்படி டீம் ல வந்தாரு ? வெட்கமா இல்லை ...!!!
கிழட்டு கும்ப்ளே, கஜினி லக்ஷ்மன், குட்டிசெவுறு டிராவிட் , செல்பிஷ் டெண்டுல்கர் இவங்க மட்டும் தான் கிரிகெட் விளையாட பொறந்தாங்களா ?
இல்லை இது
கவர்மன்ட் வேலையா அறுபது வயசு வரைக்கும் விளையாடிட்டு இருக்க? இவங்க ஆடினா தான் மக்கள் பார்ப்பாங்க இல்லனா டிவி எல்லாம் ஆப்ப் பண்ணி வச்சிடுவாங்க ....ஸ்டேடியத்துல யாரும் டிக்கெட் வாங்கி மேட்ச் பார்க்க மாட்டங்களா?

இந்த மானம் கெட்ட முதுகெலும்பு இல்லாத கிரிகெட் டீம் தேவையா.........
இப்போ புரியுதா ஏன் இவனுங்க ஐ.சி.எல் வரகூடாதுனு தடுக்கரானுங்கனு.......ஐ.சி.எல் வந்தா விளையாட தெரிஞ்சவங்களுக்கு மதிப்பு கிடைச்சு இவங்களை எல்லாம் இதே மக்கள் காறி மூஞ்சில துப்பும்ல....

செவ்வாய், 7 அக்டோபர், 2008

ஹலோ துபாயா!!

நமது கன்ஸல்டண்டும் கிளைன்டும் பேசிகொல்கயில்...
நம்மவர் : ஹே மண் ஹொவ் ஆர் யு? (ஆனா யாருன்னே தெரியாது)
கிளைன்ட்: யா அம் பைன். ஹொவ் அபௌட் யு? பை த வே, வாட் ஆர் யு?
நம்மவர் : நான் ஒரு முல்டி பங்சனல் காங்சுல்டன்ட். (வெள்ளகாரண்ட தமிழ் )கிளைன்ட்: வாட் ஆர் யு சேயிங்? வாட் இஸ் யூர் நேம்?
நம்மவர் : மை நேம் இஸ் நாட் ...இஷ்ஊஊஊ ........ இ அம் மார்க்.. பிரம் துபாய்.. கிளைன்ட்: ஓ...
நம்மவர் : யு சி... ஐ ஹவே பதினெட்டு இயர்ஸ் ஆப் எஸ்பிரியந்ஸ்!!
கிளைன்ட்: வாட் ஆர் யு சேயிங்?
நம்மவர் : எனி ப்ரோப்லேம் காண்டாக்ட் மீ எனி டைம்.
கிளைன்ட்: யு ஆர் எ யுஸ்லெஸ் மேன்..
நம்மவர் : யா யு கேன் யுஸ் மை மொபைல்..
கிளைன்ட்: ஜீச்ஸ் கிறிஸ்ட் ..
நம்மவர் : நோ, ஐ அம் ஹிந்து..
கிளைன்ட்: @%$@#$!@#$!@#$.

அப்புறம் என்ன அடுத்த ஆளு தான்.. (ஆஆஆஆஆஂஂஂஂஂஂஂஂஂஂஂஂஂவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)