புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

செவ்வாய், 30 செப்டம்பர், 2008

விசாரணை விவரங்கள்:

சிங்கத்தை சாய்த்த்து யார் என்ற விசாரணையில், இது ஒரு பர் துபாய் குறுக்கு சந்துல் வசிக்கும் ஒருவர் என கண்டுபிடிக்க பட்டது. மேலும் இவர் கொடுர பயங்கர வாதி என்றும். பொங்கல் போடுவதில் பெரிய ஆல் என்றும் கண்டுபிடிகபட்டது. சிங்கம் வெளி இட்ட பயோடேட்டா விற்கும் இதற்கும் நிறைய பொருத்தங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் விளம்பர இடைவேளைக்கு பிறகு.

சனி, 27 செப்டம்பர், 2008

Flash News: சிங்கம் சாய்க்கப்பட்டது

தலைவனுக்கு தலைவனா,  தொண்டனுக்கு தொண்டனா, சப்போர்ட்டுக்கு சப்போர்ட்டா, அதுக்கு அதுவா, இதுக்கு இதுவா இருந்த எங்க சிங்கத்த சாச்சி புட்டானுக..
ஒரு வேளை இது வெளி நாட்டு சதியா இருக்குமோ... 
இதனால் அமெரிக்கா, பிரிட்டின், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள்ல விசாரணைக்கு உத்தரவிடபட்டுள்ளது.. 

 தொடரும் ..

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

பய டேட்டா : காக்கா கபாலி

அட இவ்வளவு நல்லவரா இவரு.........எங்க இருக்காரு....பக்ரைன் ஆ? அபுதாபியா ? பர்ர் துபாயா ?

அட இல்லப்பா நம்ம பன்னாரி மாரியம்மன் கோயில் ல கூழ் ஊத்தராருப்பா.....

ஒஹ் ஹோ ..... நான் கூட வெளி நாட்டு தூதுவர்னு நினைச்சேன்......

டேய் என்னடா எதோ பய டேட்டா போடறேன்னு சொல்லிட்டு எதோ உளறிட்டு இருக்க.......

இல்லைங்ன்னே சும்மா ஒரு டிபரன்ட்டா இருக்கட்டுமேனு எழுதினேன்......

நிறுத்திக்கோ இதோட நிறுத்திக்கோ..........இல்லனா.........ரெம்ப குஷ்டம் ச்சே கஷ்டம்.......

அப்போ என்ன தான்னே எழுதறது?

எதையாவது பொதுவா எழுது...... சினிமா பத்தி எழுது சினிமா நடிகர் பத்தி எழுது......

அண்ணே....நடிகைய பத்தி எழுதலாமா........

ஆரம்பிச்சிட்ட இல்ல உன்னால லந்த கொடுக்காம இருக்க முடியாதா?

அதானே லந்து மணி.......

இப்படியாக சில பல விவாதங்களுக்கு பிறகும்......முதல் பய டேட்டா ரத்தக்களரியை பார்த்த பிறகும்......லந்துமணி தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் அடுத்த டாபிக்கை தேடி தன் பாதையில் விரைவாக பயணித்தார்........

(தொடரும்.....)

வியாழன், 25 செப்டம்பர், 2008

லந்துமனியின் டயரி

எதுக்கு இப்போ தனியா பதிவு ஆரம்பிகறீங்கனே........ டேய்.. blogg தலையா .நமக்குன்னு தனியா வண்டி இருந்தா நாம எப்படி வேணும்னாலும் ஓட்டலாம் இல்லையா..... அப்போ ஓட்டறதுன்னு முடிவு பண்ணிடீங்கலான்னே..... ஆமாண்டா.....நீயும் எதாவது பதிவுகள அப்பப்போ போட்டு தாக்கு..... அப்பப்போ என்னன்னே....டெய்லியும் போட்டுட்டா போச்சு...... டேய் வாய்க்கு வந்தத பேசுரமாதிரி கைக்கு வந்தத எல்லாம் எழுதற எடம் இல்லடா இது.... நீங்க சும்மா இருங்கனே.....மைக்க பிடிச்சா வாய்க்கு வந்தத தான் பேசணும் ....கீ போர்ட எடுத்தா கைக்கு வந்தத எல்லாம் அடிக்கனும்னே.......... அப்போ ஒன்னு பண்ணு நீயே ஒரு பதிவு ஆரம்பிச்சு அதுல உன் வித்தைய காட்டு... கொவிச்சுக்காதீங்கனே.......இதுலையே எழுதறேன்...... அப்போ நம்ம ரூல்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணனும் ஓகே........ ஓகே...னே...........

புதன், 24 செப்டம்பர், 2008

பய டேட்டா - சவடால் சங்கரு

பய ( ங்கர ) டேட்டா
பெயர் - முண்டாசு முருகேஷ்

வயது - பாடம் சொல்லி குடுத்த வாத்தியார மறக்காம பத்து வருஷமா காலேஜ் போற வயசு .

புதிய தொழில் – முண்டாசு கட்டி காத மரசு ஒட்டு கேட்குறது .

உப தொழில் – ஊருல இருக்கறவன் எத பேசினாலும் ஓடி போய் கேட்பது.

முன் அனுபவம் - "ஓவர் பில்டப்" ல Ph.D , "கவுக்கரதுல" M.Phil, அவரா அசிங்க படுறதுல அவ்வுளவு கெட்டி காரர் ,

நண்பர்கள் – அத எப்படி என் வாயால....

எதிரிகள் – தின்பண்டம் குடுகாதவர்கள்.

பிடித்த இடம் – ஆபீஸ்..

பிடித்த வேலை – அடுத்தவங்களை நோட்டம் போட்டு அலப்பரைய கொடுப்பது

தற்போதைய பொழுதுபோக்கு – ஆப்பிள் சாபிடுவது.

எதிர்கால பொழுதுபோக்கு – கொய்யாகாய் சாப்பிடுவது.

விரும்புவது – இவரு மட்டும்தான் எல்லாத்தையும் கலட்டுனாருனு

வெறுப்பது – கொடுக்காமல் சாப்பிடுபவர்களை

மறந்தது – பலரிடம் அடிவாங்குவதை

மறக்காதது – அடி வாங்கியதை

எரிச்சல் -- சமீபத்தில் நடந்த தும்பயியல் சம்பவம் .

ரசித்தது – அப்படிஎல்லாம் ஒன்னும் இல்லிங்கோ

ரசிக்காதது – மூஞ்சிக்கு நேரா பேசி அசிங்கபடுத்துவதை

ஒரே சாதனை – இரண்டு வருட காலம் ஒரே வேலையில் இருந்தது

சமிபத்திய சாதனை – பார்த்தவுடன் டக் என ஆட்களை தெறித்து ஓட செய்வது.

நீண்டகால சாதனை – சத்தமாக சிரிப்பது

செவ்வாய், 23 செப்டம்பர், 2008

லந்து மணியின் அறிமுகம்

ஹாய் லந்து பார்டீஸ்..........

நான் லந்து மணி .....எங்கும் எதிலும் எப்போதும் லந்தை கொடுக்க.... உங்களுக்காகஅவதாரம் எடுத்த ஒரு லந்து பார்டீ......

நம்ம கும்மாளம் நண்பர்கள் கும்மியடிக்க என்னை ஆர்வமாய் அழைத்தார்கள்....
சரி எவ்வளவோ பண்ணிட்டோம் ....இத பண்ண மாட்டோம்னு......கிளம்பி.... லந்துடேன்....ச்சே....வந்துட்டேன்......

'வீனா....'சுனா......இப்ப.....சந்தோஷமா........ எண்ணா....வில்லத்தனம்........

கூட்ட்டமா சேர்ந்து கும்மியடிக்க ......ஆரம்பிச்சா.....எவன் மட்டுனாலும் டவுசரகலட்டி கை விளங்க போட்டுடுவிங்கள்ள.......

அதுக்குன்னு அவர நீங்க அப்படியெல்லாம் செஞ்சிருக்க கூடாது......நைட் எல்லாம்தூங்காம அழுதுட்டு இருந்தாரம்....எங்கிட்ட ரெம்ப வருத்தப்பட்டாரு......

அய்யோ..... அய்யோ.....

வரட்டுமா.......

ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

இது தான் உசுபேத்துறதுதா !!

நமது 10435 வது ஜ கே ரிதீஷ் ரசிகர் மன்ற ஜெட்டா கிளைய பிடிக்காத ஒருத்தரு.. காக்கா கபாலி கிட்ட போய், நீங்க என் சினிமா ல நடிக்க கூடாது .... ரஜினி கமல், விஜய் அஜீத், ஜ கே ரிதீஷ் காக்கா கபாலி அப்படின்னு சொல்லி இருக்காரு... இத கேட்டுட்டு ஒரெ குஜால் மூடு தான் நம்ம காக்கா கபாலி.. ஹீரோயின் ஆ யார போடுறதுன்னு யோசிக்கிராருனா பாருங்களேன்...

சனி, 13 செப்டம்பர், 2008

காக்கா கபாலி

ஒரு அறிமுகம்.....

இனிமேல் இவர் தான் நம்ம கொமெடி கதாநாயகன்........காக்கா னு பேருவந்தது எப்படின்னா......... இவரு கலரு பிளஸ் காக்கா பிடிக்கறதுல பெரிய ஆளு......இன்டர்நேஷனல் லெவெல்ல "அகில உலக காக்கா" அவார்ட்எல்லாம் வாங்கிருக்கார்.........

கபாலி என்பதும் அவர் வாங்குன பட்டம் (படிக்காம )தான்...... கபாலி போடருதுனா........எவனாவது சிக்குனா பெட்ஷீட் போட்டு ரவுண்டுகட்டி அடிக்கறது............
அதுசரி.......இவருக்கு எப்படி இந்த பேருன்னு யோசிக்கறீங்களா.................

இவரும் எவனாவது சிக்குனா அவன்கிட்ட பத்து பைசா இல்லாம உருவிகிட்டு உட்டுடுவாறு...அதனால நம்ம ஹீரோவ பார்த்தா அவனவன் துண்டைக்கானோம் பர்ஸை காணோம்னு தெறிச்சு ஓடுவானுங்க......

இன்ட்ரோ......போதும்னு நினைக்கிறேன்.....எதுக்கு வெய்ட் பண்ணிக்கிட்டு......

கிளம்புங்கையா..............அஹ் ஹா....

அட என்ன குறுகுறுகுறுனு பாக்கறீங்க.............

கிளம்புங்கப்பு....பட்டைய கிளப்புங்க.............

ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

பிசினஸ் ப்ராசெஸ் ல ஒரு டவுட்..........

சார் .....இந்த பிசினஸ் ப்ராசெஸ் ல ஒரு டவுட்..........

இப்படித்தான் நான் கேக்ரான் மேக்ரான் கம்பெனி ல வேலை பார்க்கும் பொது ஒரு மேனேஜர் என்ன பாத்து இப்படி கேட்டார்........அப்போ.....நான் ஒரே ஆளு டோட்டல் பிசினஸ் எ தூக்கி நிறுத்தினேன்..... (அஹ் ஹா.........)

சார் இன்னைக்கு கிளைன்ட் கிட்ட இந்த பிசினஸ் ப்ராசெஸ் பத்தி எக்ஸ்ப்ளைன் பண்ணனும் சார்........அதான் உங்ககிட்ட டவுட் கேக்கலாம்னு.......

கரெக்ட்....இதே தான் அவரும் கேட்டாரு......ரொம்ப அர்ஜென்ட்னு வேற சொன்னாரா.....இத சொல்லும்போது தான் இன்னொன்னு ஞயாபகம் வருது......அவருக்கு ரெண்டு பொண்ணுங்க ஒரு பொண்ணு நல்ல படிக்கும் ....இன்னொன்னு சுமாரா படிக்கும்.... (ஸ்டார்ட் பண்ணிட்டாரு இனிமே வேலைக்காகாது......)

சார் உங்களுக்கு இந்த டவுட் எல்லாம் மெயில் ல அனுப்றேன் சார்.......எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...........

இப்படித்தான் நைன்டீன் எய்ட்டில ஒரு மெயில் எனக்கு வந்தது.....From அட்ரசும் இல்ல To அட்ரசும் இல்ல..........

அய்யோ.....சார் நான் சொல்லறது மைக்ரோஸாப்ட் அவுட்லுக் மெயில் சார்........

அவுட்லுக் னு சொன்னதும் ஞயாபகம் வருது ....நான் எப்பவும் ட்வென்டி தௌசண்ட் மேல தான் டிரஸ் வாங்கி போடுவேன்.....அப்போ நம்ம ஊர்லையே பெரிய டய்லேர் கிட்ட தான் ஸ்டிச் பண்ணுவேன் அந்த கடை பேரு அவுட்லுக் தான்......

மைக்ரோஸாப்ட்...னதும் எனக்கு நினைவிருக்கு....ஒரு நாள் பில்கேட்ஸ் கிட்ட இருந்து அவசரமா ஒரு போன்....பட் நான் ரொம்ப பிசியா இருந்தேனா........ஸோ....என்னோட அசிஸ்ட்டன்ட் கிட்ட சொல்லி அட்டென்ட் பண்ண சொன்னேன்........

சார் ....இப்போ புரிஞ்சுது சார்...கம்ப்லிட்டா புரிஞ்சு போச்சு.......மெயில் அனுப்ப தேவை இல்லை ........தேங்க்ஸ் சார் ..... (ஆள உட்டா போதும் டா சாமி........முடியல...)

இப்படித்தான் தேங்க்ஸ் னு எனக்கு கீழ வேலை பார்த்த ஐந்நூறு பேருல ஒருத்தன் சொன்னான்....அப்போ நான் அவன்கிட்ட சொன்னேன் .....தேங்க்ஸ் னு சொல்லக்கூடாது...தாங்க் யு னு சொல்லனும்னு.........அப்ப அந்த ஐந்நூறு பெரும் எழுந்து கைதட்ட்னாங்க..........

(சார்.....தலை சுத்துது.....வாந்தி வரமாதிரி இருக்கு.........உவ்வே......உவ்வே...

--நண்பர் சுருண்டு விழ இன்னொரு நண்பர் அவரை தாங்கி பிடித்த படி .....என்ன சார் ஆச்சு இவருக்கு ?--

இப்படித்தான் நான் நியூயார்க் ல ஏர்போர்ட் ல நின்னுட்டு இருக்கும்போது..............

(பிடித்தவரும் மயக்கத்துக்கு போகிறார்.....)

துடும்...துடும்....டும்..டும் .....

துடும்...துடும்....டும்..டும் .....


இதனால நம்ம கும்மாளம் சனத்துக்கு தெரிவிசுக்கறது என்னன்னா.......நம்ம கும்மாளத்துல ....புதுசா....ஒரு காமெடி கேரக்டர உருவாக்கப்போரோமுங்கோவ்......அதுக்கு நம்ம சனம் அத்தனையும் நாளைக்குள்ள ஒரு நல்ல பேரு ஒன்னு கண்டுபிடிச்சு கொடுக்க கேட்டுகரோமுங்கோவ்........

இதுல நல்ல பேரு சொல்றவங்களுக்கு....பகுமானமா ஒரு வெகுமானம் காத்திருக்கு சாமியோவ்வ்....... துடும்...துடும்....டும்..டும் .....

சனி, 6 செப்டம்பர், 2008

தாம் தூம்

தாம் தூம் பெயர் நல்ல புதுசா கன்டு புடிச்ச பலகாரம் மாதிரி இருக்கு... சரி படம் எப்படி இருக்குன்னு பாத்தா...., கையில வேல் எடுத்து ஜெயம்ல சுத்திகிட்டு இருந்த நம்ம ரவி, நெக்ஸ்டு பாக்ஸிங் பண்ணி பார்த்தாரு, அப்புறம் இந்த படத்துல படிச்சி டாக்டர் ஆயிட்டாறு.... நம்ம கங்கனா ஒரே நாட்டி போங்க... டைரக்டர் ஏதோ கண்ணு முழிச்சி சில பல சைனீஸ் மற்றும் ஆங்கில படங்கள் பாத்திருக்கர்ருனு தெரியுது... ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்... இது வரைக்கும் ஒரு புள்ளை காக பல பேத்த இந்தியா வுல அடிச்சி கிட்டு இருந்த நம்ம கதா நாயகன், ஏதோ வெளி நாடு சுத்தி பாக்கனும்னு ஆசை பட்டு சொவியெத் பக்கம் போய்ட்டு ... ஏற்கனவே அது சிதஞ்சி கிடக்கு இதுல இது வேற.... இந்தியாவுல சண்ட போட்ட ஷூட்டிங் ஸ்போட் லையே மக்கள் கன்டிக்கிராங்கலாம் அதனால வெளிநாடு போய்ட்டு தள.. சும்மா வா ஒரு ஆளு 100 பெற போட்டு அடிச்சி கிட்டு இருந்த விடுவாங்களா சுராசிக் பார்க்ல டிநோஸர் கூடு சுமார் பாத்து பேர தான் அடிக்கும் அப்படின்னா பார்த்து கோங்க.. ஒரு பாட்டு நல்லா இருக்கு.... மத்த படி எல்லாம் ஹும்ம்ம்... கண்டிப்பா பாக்கணும்... லக்ஷ்மி ராய் காக கண்டிப்பா பாக்கணும்...ஏனா அவங்களும் கொஞ்ச நேரம் வராங்க..... முடிஞ்சா நீங்களும் பார்த்துட்டு கும்மி அடிங்க....

வாங்க......பொங்கல்.....போடலாம் .....

அண்ணே...அண்ணே.....வாங்க பொங்கல் போடலாம் (என்னடா.....வாங்க பழகலாம்னு சிவாஜி ல கூப்பிடறமாதிரி கூப்பிடுறானே....வில்லங்கத்த விடிய காத்தால கொண்டுட்டு வரானேன்னு ....ஜெர்ர்க்கு ஆகிறாரு தலை என்று செல்லமாக அழைக்கப்படும் குருடாயில் குரு).

அப்புறம் தான் சொல்லறான் இது வெண்பொங்கல், சக்கரை பொங்கல் இல்லானே....இது bloggu   பொங்கல்னான்.......

அடேய்....நார்னியா தலையா ஏண்டா காலங்காத்தால உன் டார்ச்சற எங்கிட்ட ஆரம்பிக்கற…....

இல்லைங்க்னே..... பொங்கல்ல ரெண்டு டைப்   இருக்குனே.....பசங்க பொண்ணுங்க கூடவோ ...இல்ல பொண்ணுங்க பசங்க கூடவோ மொக்கை போட்டா அதுக்கு கடலைன்னு சொல்லுவாங்க.....

அதுவேபசங்க, பசங்க கூடவோ , இல்ல பொண்ணுங்க, பொண்ணுங்க கூடவோ பேசினா அதுக்கு பேருதான் பொங்கல்.....இப்ப புரிஞ்சுதா........

(அஹ ஹா..... ஆரம்பிச்சுட்டானே......) டேய் இதெல்லாம் யாருடா உனக்கு சொல்லித்தறது எங்கிருந்து கத்துக்கற……..

அய்யயையே.......நானே....ஒக்காந்து யோசிச்சன்னே.....அதுவும் நம்ம சுணா...விணா எழுதறத படிச்சு படிச்சு மூளை இப்படி வேலை செய்யுதுனே........

டேய் பொங்கல் பண்ணி .....அவிங்கல்லாம் ரெம்ம்ப அறிவாழிங்கடா.....நீ அவிங்க எழுதறத படிச்சுபுட்டு கொஞ்சநஞ்சம் கழண்டு போனது எல்லாம் மொத்தமா கழண்டு மெண்டல் ஆகிடபோறடா.....

போங்கண்ணே உங்களுக்கு பொறாமை…..

சரி இப்போ என்னதான் பண்ண சொல்லற......

வாங்க டி கடைக்கு போவோம்....ஒரு மணி நேரம் பொங்கல போட்டுட்டு ஒன்னு ரெண்டு பஞ்சயதுகள பண்ணி விட்டுட்டு வருவோம்....இதெல்லாம் உங்களுக்கு புதுசா.....ஆங்.....சும்மா வாங்கன்னே...நான் பார்த்துகிறேன்.....(நீ இப்படி நான் வாங்கறதா பார்த்துட்டுதானே இருக்க....)

அடேய்.....வெண்பொங்கல் மண்டையா....எனக்கு வேலை இருக்குடா.....

அப்போ இது உங்களுக்கு வேலை இல்லையா .....பொது வாழ்கைன்னு வந்துட்டா நீங்க சொந்த விஷயங்கள்ல இருந்து கொஞ்சம் ஒதுங்கிகனும் ஆமா.........சரி வாங்க எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க........

அடேய் ஏலியன்ஸ் மூஞ்சி..........உன்கிட்ட எப்படா சொன்னேன் பொது வாழ்கைக்கு வந்துட்டேன்னு....ஏண்டா ஒரு வேட்டி கொஞ்சம் வெள்ளையா கட்டகூடாதாடா.......

போங்கண்ணே.....உங்க கிட்ட இதுதான் புடிக்காது .....தன்னடக்கம் ரேம்ம்ம்பா ஜாஸ்திண்ணே.........

சரி இன்னைக்கு எனக்கு சனி சடை போட்டு பூவு வச்சுக்கிட்டு தலைல உக்காந்துடுச்சு..........சரி வா.....

(டி கடைல ஏற்கனவே ஒரு கோஷ்டி அஞ்சு மணில இருந்து ஒரு லைன் விடாம பேப்பர பொரட்டி எடுக்கறதும்....சிக்கினவன எல்லாம் பொங்கல போட்டும் .....அனுப்பிட்டு இருந்தது இப்போ தலையும் நம்ம பொங்கல் பொன்னுசாமி (ஷார்ட் ஆ PP ) யும் அங்கே போய் பட்டரைய ...போடறாங்க)

டேய் …… தலைவருக்கு ஒரு ஸ்ட்ராங் டி , எனக்கு அப்படியே ஒரு பால் டி போட்டுக்க..........

ரெண்டு பேருக்கும் சுடு தண்ணிதான் மூஞ்சில ஊத்துவேன்....ஓடிப்போயிடுங்க........

ஏய் என்னப்பா தலைவர மரியாதையை இல்லாம பேசிட்டு இருக்க....இந்த இடத்துல கடை இருக்கணுமா வேண்டாமா ? ( பிபி கைய மடிச்சுவிட்டுகறான் )

(அஹ் ஹா.... இன்னைக்கு டி குடிக்க கூட விடமாட்டன் போலிருக்கே ....)

ஏப்பு....சின்ன பையன்......அவன விடப்பு......நீ டீ ய போடூ..........

மொதல்ல காச போடு ....அப்புறம் டி ய போடலாம் உனக்கே டி கிடையாது இதுல கூட அல்லக்கைங்க வேற.............

இந்த பொழப்புக்கு எங்கயாவது பிச்சை எடுத்து பொழைக்கலாம்.... பொளேர்ர்ர்ர்ர்ர்...........ஒரு அறை டி மாஸ்டர் கன்னத்துல விழுந்தது....... பொறிகலங்கி போய் பார்த்த முன்னால நிக்கறவன் எல்லாம் மங்கலா தெரியரானுங்க.... எல்லாரும் யாரு அடிச்சா னு பார்த்தா ...அங்கே ஒரு பிச்சகாரன் ரொம்ப கோவத்துல நிக்கறான்........... எதுக்குடா அடிச்சே....உனக்கு என்ன பய்த்தியமா...? லூசாடா நீயி..........

நீ எதுக்குடா என்ன கேவலமா பேசுன....என் பேங்க் பாலன்ஸ் தெரியுமா?....கிரெடிட் கார்டு கு மட்டும் மன்த்லி .....முப்பதாயிரம் கட்டுறேன் தெரியுமா.......அவன் சொல்லிகிட்டே ...அழுக்கு பைக்குள்ள கைய விட்டு...தேடினான்.... ரெண்டு மூணு கிரெடிட் கார்டு, எ டி எம் கார்டுங்க....கீழ விழுந்தது அதை ஓடிபோய் PP எடுத்து அவன்கிட்ட கொடுத்தான் ...அப்போ இன்னொரு டப்பா கீழ விழுந்தது .......அதையும் எடுத்து அவன்கிட்ட கொடுத்தான் ....இது என்னன்னு தெரியுமா ? .....PP முழித்தான்......டப்பாவை பிரித்து உள்ளே இருந்து ஒரு செல் போன் எடுத்தான்.....அது மாதிரி செல் போன்….. தலையோ ,  PP யோ வாழ்க்கைல பார்த்ததில்ல....ஏதோ....மினி கம்ப்யூட்டர் மாதிரி இருந்தது....அப்போ அவன் சொன்னான் .....இதுதான் ஐ போன் த்ரீ ஜீ..........இந்தியால கிடைக்காது அமெரிக்காவுல இருந்து என் பையன் அனுப்பினான்.....அவன் சொல்லிகொண்டே போக ............தலையும், PP யும் தலை சுற்றி மயங்கி விழுந்தார்கள்.....இப்போதான் அவர்களுக்கும் டி மாஸ்டர் கும் எதுக்காக அறைஞ்சான்னு விளங்க ஆரம்பித்தது ...... என்னைப்போய்  போய் இவன்கூட கம்பேர்  பன்றயே ….அறிவு இருக்கா............(அவன் மாஸ்டர் ஐ அசிங்கமாக திட்ட ஆரம்பித்தான்)…..... தலை மெதுவா திரும்பி PP ஐ பார்க்க அவன் நைஸா நழுவ ஆரம்பித்தான்….....

டேய் நாய் கரண்ட மண்டையா ....நன்னாரிப்பயலே ...... சும்மா இருந்தவன கூட்டிட்டு வந்து பிச்சகாரங்க்கிட்ட அசிங்கப்பட வச்சிடியேடா……......

டேய் நில்லுடா……....

…….நிக்கமாட்டேன் நின்னா கல்லால அடிப்பீங்க……

……. டேய் நிக்கலனாலும் அடிப்பேண்டா…………

…….எங்க போனாலும் உன்ன விடமாட்டேன்டா..... (வேட்டி அவிழ்ந்து விழுவது தெரியாமல் துரத்திக்கொண்டு PP பின்னால் தலை தலை தெறிக்க ஓடிக்கொண்டு இருக்கிறார் .....).

அந்த பிச்சைக்காரன் குடித்த டீ கு காசு சரியாக கொடுத்துவிட்டு எதிர் திசையில் அமைதியாக நடந்தான்………..

வானம் மேகமூட்டம் இல்லாமல் தெளிந்து காணப்பட்டது...........

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

கிறுக்கல்கள்-2

உன்னை காண காத்திருக்கும் கண்களுக்கு

உன்னை கானது போனால் வலிகள் அதிகம்....

அந்த வலிகள் கண்களுக்கு மட்டும் அல்ல

இதயத்துக்கும் தான்...

வியாழன், 4 செப்டம்பர், 2008

இன்று ஒரு வினா ?

ஹாய் டமில் கய்ஸ்.....!!!!....

வழக்கமாக ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்பார்கள்..for a Change.. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கில வார்த்தைகளை சொல்லுங்க.....

சரியான விடைகளை SMS செய்ய வேண்டிய Format <கும்மாளம்> space  <>  

1. தீர்வு மேலாளர்.

2. நிலைய பராமரிப்பு.

3. விற்பனை& விநியோகம்.

4. உற்பத்தி பழனுதல்.

5. திட்ட நிர்வாகி.

6. நிதி&கட்டுப்பாடு.

7. பொருள் நிர்வாகம்.

8. முன்னேறிய தொழில் பயன்பாட்டு திட்டம்.

9. தொழிற்த்துணிபு வலைவாசல்.

10.பரிமாற்ற உள்கட்டமைப்பு.

11.வர்த்தக நுண்ணறிவு.

12.அடிப்படை நிர்வாகம்.

13.ஆவண நிர்வாக கட்டமைப்பு.

14.தர நிர்வாகம்.

15.பணிப்பாய்வு.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


புதிய தத்துவம் 2

கும்மிடி பூண்டில குப்புற உழுந்தாலும் .......மன்னார் குடி ல மல்லாக்க உழுந்தாலும் ....ஒடைய போறது என்னமோ பள்ளுதான்..........

யாரு இந்த ஜென்னா ஜேமிசன்?

இந்த கேள்விய போதைல இருக்கறப்போ தெரியாம கேட்டுட்டேன் ...அதுவும் வெள்ளகாரண்ட... இத கேட்டதுக்கு தான் வடிவேலு காமெடி பாத்த மாதிரி சிரிச்சிடானுவ....சரி யாரோ பிரைம் மினிஸ்டரொ ப்ரெஸிடண்டோ நமக்கு தெரியலன்னு நெனச்சேன்..அப்புறம் தான் தெரிஞ்சுது இது காமடி மேட்டர் இல்ல காமவெடி மேட்டர்னு. சரி கொஞ்சம அவங்கள பத்தி சொல்லுங்கடான்னு கேட்டா ..உஜாலா பட(டு)வுலகின் உச்ச நாயகி, மேட்டர் படங்களின் மகராணி அப்டி இப்டி னு பீலா உட்ராங்கே. சரி புகழ்ந்தது போதும் வாழ்கை வரலாற கொஞ்சம் சொல்லுங்கடானேன். அவங்க பதினெட்டு வயசுல இருந்து இந்த சேவைய செஞ்சிகிட்டு இருக்காங்க , இப்போ அம்பது வயசாகுது இன்னமும் அவங்க கலைப்பசி அடங்கலேன்னும், அம்மணி சேவை நாட்டுக்கு தேவைனு உலக ஆண்வர்க்கம் அவங்களுக்கு கன்னாபின்னானு ஆதரவு அளிப்பதாகவும் தெரிஞ்சிகிட்டேன். மனுஷனுக்கு ஞானம் வரப்போ ஒரு ஒளி வரும்னு சொல்வாங்க அது மாதிரி அவன் இந்த விஷயத்த பத்தி சொல்றப்ப அவன் மொகத்துல ஒரு தவுசண்ட் வாட் வெளிச்சம் தெரிஞ்சுது. இந்த ஜென்மம் எடுத்ததே இதுக்காக தாங்கற மாதிரி ஒரு பெருமை. ஒரு தலைமுறையே இவங்கள பாத்து வளந்திருக்குனு தெரிஞ்ச உடனே ரொம்ப ஆர்வமாகி சரி இன்னைக்கு எப்படியும் இத்த பாத்ரனும் இல்லாட்டி நம்ம எதிர்கால சந்ததிகள் நம்மள காரி துப்புமேன்னு அவன்டயே கேட்டேன். அவனும் ஒரு ஹர்ட் டிஸ்க் குடுத்து இத பாத்து இவங்க புகழ நீயும் பரப்புனு சொல்லிட்டு போய்ட்டான். கால் நூற்றாண்டுகளாக இளைஞர்களை துரும்பாக்கிய அந்த தெய்வீக படைப்பை நானும் பார்த்தேன்....ஆஹா அற்புதம் ..அந்த அனுபவத்த விளக்க வார்த்த இல்ல... உடனடியா அகில உலக ஜென்னா ரசிகர் மன்றத்துல என்னையும் இணைச்சுகிட்டேன், எப்படியோ நானும் இந்த நாட்டுல வாழ்றதுக்கான பல தகுதிகள்ள ஒரு தகுதிய பெற்றுடேன். மோட்சத்தை நோக்கிய எனது பயணத்தில் இது ஒரு குறிப்பிடதக்க மைல்கல். ஆனா இந்த பயணத்தை ஆரம்பிச்சு வெச்ச நம்ம ஊர் ஷகிலாவ அடிச்சிக்க முடியாதுங்கறது என்னமோ உண்மை......என்ன சொல்றீங்க பாஸ் ?..

மாப்பு வச்சிட்டாங்க ஆப்பு!!!

நாம்பாட்டுக்கு சவூதி அரேபியா. செவனேன்னு பெஞ்சுல outlook ,Youtube , orkuttum மட்டுமேப் பர்த்த்கிட்டு உக்காந்திருந்தேன்...
திடீர்னு ஒரு PM மெயில் பண்ணி மச்சி ஒரு project இருக்கு சேந்துக்கிறியானுக் கேட்டான்..நானும் சரின்னு சொன்னது வம்பாப் போச்சு..
அவன் பெங்களூர்ல ஒரு PMக்கு போனப்போட்டு இங்க ஒருத்தன் சிக்கியிருக்காண்டா வாடா அலம்பிரலாம்னான்...
அதுக்கு அவன் சொன்னான் அவன இங்க அனுப்புடா நான் பாத்துக்கறேன்னு...
ஒரு Flight ல் ஏத்தி என்ன பெங்களூருக்கு அனுப்பினாங்க..நானும் வெயில் காலத்துல குளுகுளுன்னு இருக்குமேன்னு நம்ம்ம்ம்பி...பெங்களூருக்கு வந்துட்டேன்...
இங்க டீம்ல ஒரு 20 பேரும்மா...
எல்லாப் பயலுகளும் மூச்சுத் தெணற தெணற வேலை செய்யறானுங்க...outlook um orkuttum மட்டுமேப் பார்த்த எனக்கு இது புதுசா இருக்கு...என்னோட PL வேற அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு modules-aiyum எங்கிட்டத் தள்ளி விட்டாரு...
நானும் எவ்வளவு நேரம் தான் configuration பண்ற மாதிரியே நடிக்கிறது?(உங்களால முடியலன்னா தெரியாதுனு சொல்லிட வேண்டியதுதான?)நான் எப்பவும் வேலைய செய்யாம மெயில்,Youtube , orkuttum பண்ணிட்டே இருக்கிறத பார்த்துட்டு என்னோட PL "எவ்வளவு வேல கொடுத்தாலும் இவன் மெயில்,Youtube , orkuttum பண்ணிட்டே இருக்கான்...
 இவன் ரொம்ப நல்லவன்"னு சொல்லிட்டாருமா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

புதன், 3 செப்டம்பர், 2008

சிங்கத்த சீண்டிப் பார்ப்போமா...?


நம்ம சங்கத்து பெரிய சிங்கத்த புரிஞ்சிக்கவே முடியல...

"வல்லரசு" படத்த DVD ல பார்த்துட்டு நம்மள உசுப்பி விட்டுடுச்சி... இங்க அவனவன் நைட் தூக்கத்துல பதிவு, பின்னூட்டம், முன்னோட்டம் னு பினாத்திக்கிட்டு இருக்கானுங்க...

அடிக்கடி குகை வாசல்ல போர்ட மாத்திகிட்டே இருக்கு...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி வாசல்ல த.மா.சு (DMS) கன்சல்டன்ட் னு போர்டு மாட்டியிருந்திச்சு...

அந்த சமயத்துல திடீர்னு கூட்டமா யார் யாரோ வருவாங்க... சிங்கத்த சுத்தி நின்னு கசமுசானு எதோ பேசுவாங்க... கொஞ்ச நேரத்துல பாத்தா அந்த பதினோரு பேரும் மூணு மணி நேரத்துக்கு சிங்கத்த குத்தகைக்கு எடுத்திருப்பாங்க...
ஏதாவது ஒரு ட்ரெய்னிங் ரூமுக்குள்ள சிங்கம் ஒரு PPT ய நாலாவது தடவையா ஓட்டிக்கிட்டு இருக்கும்.

சரி துக்கம் விசாரிக்கலாம்னு உள்ள போனா அதுல பாதி பேரு Youtube ல சீரியஸ்ஸா எதையோ தேடிக்கிட்டு இருப்பானுங்க. இல்லன்னா வட்டமா உக்கார்ந்து Al-Baik சிக்கன் வெட்டிகிட்டு இருப்பானுங்க...

நமக்கு சிங்கத்தோட விருந்தோம்பல் எப்பவுமே பலமா இருக்கும்... (நாம உள்ள போனதே அதுக்கு தான...)

அவிங்களும் நம்ம பலவீனம் தெரியாம "கம் ஆன் மேன்! டேக் இட்! " னு சொல்லிட்டு பின்னாடி வருத்தப்படுவாய்ங்க...

ஒரு நாள் SD ட்ரெயினிங்ல சரக்கு முடிஞ்சி போயி என்ன பண்றதுன்னு தெரியாம சிங்கத்த வந்து கூப்பிட்டாங்க...

இப்போ திடீர்னு வந்து சொல்றீங்க...?
நா இன்னும் Configuration னே ஆரம்பிக்கல...
அதுக்கப்புறம் டெஸ்ட் பண்ணனும்... Document ரெடி பண்ணனும்... ன்னு என்னென்னவோ சொல்லி பார்த்துச்சி...

"ஜோக் அடிக்காதீங்கண்ணே அதெல்லாம் மெதுவா பார்த்துக்கலாம்... இப்போ வந்து ட்ரெயினிங் மட்டும் எடுங்க போதும்" னு கூலா சொல்லி அழைச்சுட்டு போனாங்க...

"நீங்கதாங்க எங்க Quality Consultant னு அந்த ஆண்டவனே சொல்லிட்டான்னு சொல்லி சிங்கத்து வயித்துலேயே புளியை கரைச்சும், சிங்கம் அசரல... ஏற்கெனவே இருந்த போர்டுக்கு கீழேயே கொல்டி மேனேஜ்மென்ட் னு இன்னொரு போர்டு போட்ருச்சி...

அதுக்கப்புறம் இப்படி ஒரு ஆள் இருக்கற மேட்டர் நம்ம கம்பெனில எப்படியோ பரவி, 'பெரிய தல' வரைக்கும் விஷயம் போய்டுச்சு...

நேரா சிங்கத்துகிட்ட வந்த ''பெரிய தல' " ஆமா உங்க SAPல Solution Manager னு புதுசா ஒரு module வந்துருக்காமே அப்படியா?" னு பிட்ட போட்ருக்கு...

"ஆமா நானும் எங்கேயோ படிச்சிருக்கேன்" னு சிங்கம் எதேச்சையா சொல்லப்போக...

"இத ஏன் நீங்க எங்கிட்ட முன்னாடியே சொல்லல..?" னு ''பெரிய தல' செல்லமா கோவப்பட்டுச்சாம்.

மறு நாள் காலைல சிங்கம் குகை வாசல்ல சுத்தியலோட "கரைச்சல் மேலாண்மை" னு இன்னொரு போர்டு ரெடி பண்ணிக்கிட்டு இருந்துது...

சிங்கம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குதான்னு சோதிச்சு பார்க்க நெனச்ச நம்ம சின்ன தல ( அவருக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன... ) Streeing committee meeting க்கு மொத நாள் KT ரெடி பண்ணி சிங்கத்துக்கு மெயில் பண்ணிட்டு ஊருக்கே CC போட்டுட்டு லாங் லீவுல போய்ட்டாரு...

அந்த ரெண்டு வாரத்துக்கும் கம்பெனி மொபைல் போன்ல கால் வரும்போதெல்லாம் சிங்கத்துக்கு தூக்கி வாரி போடும்.

இப்போ சிங்கம் Multifunctional Consultant ஆய்ட்டதால அத வெளிநாட்டுக்கு அனுப்பி ( சவுதிக்கு இந்தியா வெளி நாடு தான...) "Solution Manager" ல டிரெயினிங் குடுக்கலாம்னு கம்பனில முடிவு செஞ்சாங்க...

சிங்கமும் " சக்சஸ் ! " னு சொல்லிகிட்டே Flight ஏறிப்போச்சு...

டிரெயினிங் முடிச்சி வந்த சிங்கம் "கண்ணன்... BASIS ல என்ன டவுட் இருந்தாலும் எங்கிட்ட கேளுங்க..." னு சொல்லிக்கிட்டு இருந்தது...

எனக்காக எனது செல்லம் கிறுக்கியவை...!!!!

உனது கண்கள் பார்க்கும் தொலைவில் நான் இல்லை என்றாலும் நீ நினைத்து பார்க்கும் அளவில் உன் இதயத்தில் இருக்கிறேன்...!!!

வாழ்க்கை

என்னதான் பெரிய துணிக்கடைக்கு முதலாளியா இருந்தாலும், அவருக்கு குழந்தை பொறந்தா துணி இல்லாமத்தான் பொறக்கும்!!! இதுதான் உலகம்...இதுதான் வாழ்க்கை...!!!!

வணக்கம்...பா.....!!!!

நண்பர்களா....வணக்கம்...பா.....!!!!

செவ்வாய், 2 செப்டம்பர், 2008

இன்று ஒரு தகவல்!

சிரஞ்சீவி இன் புதிய கட்சிக்கு போட்டியாக.. மூன்றாவது அணி உருவாக்க முயன்றவர்கள், முயற்சி பலனில்லாமல் புதிய கட்சி ஒன்டரி துவங்கி உள்ளனர். கட்சியின் பெயர் - அல்லகை முன்னேற்ற கழகம்!
இக்கட்சியில் சேர முனைவோர்.. சமையர் கட்டு பக்கமாக சென்று பெயர் பதிவு செய்யலாம்...

இப்படிக்கு,

கும்மாளம் இன்று ஒரு தகவல் குழு..

(குறிப்பு : தகவல் NTI ஆல் உறுதி செய்யபட்டது )