புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

கொஞ்சம் அதிகமா சிந்திக்கிறோமோ...



மச்சான்... இந்தாடா டீ.


தேங்க்ஸ்டா...

டேய் எனக்கு ஒரு சந்தேகம்டா.

ஒன்ன பத்தி எங்களுக்கு தெரியும்... எதுவா இருந்தாலும் டீ சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்பறமா கேளு.

இல்ல மச்சான்... இந்தியா வல்லரசு ஆகுமாடா?

டேய் ஏன்டா இப்படியெல்லாம் சிந்திச்சி பழகறீங்க? என்னக் கொஞ்சம் புடிங்கடா. என்னமோ பண்ணுது.

இல்லடா, நம்ம நண்பர் ஒருத்தர் கேட்டுட்டாரு.

அதான பார்த்தேன்...

நாம பதில் சொல்லலேன்னா நல்லா இருக்காதுல்ல.

நீ பதில் சொன்னாலும் நல்லா இருக்காது தான். ஏன்டா ஓசி டீ வாங்கி தந்ததுக்காக நீ என்ன வேணும்னாலும் கேட்டுர்றதா? சரி மத்தவங்க என்ன சொல்றாங்க?

இன்னும் யாரும் பதில் சொல்ல ஆரம்பிக்கல. எல்லாரும் நம்மள மாதிரி தான்னு நெனைக்கறேன்.

சரி நீ என்ன நெனைக்கற?

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 2020 ல இந்தியா வல்லரசு ஆகிடும்னு சொல்லி இருக்காரே!

ஆமாண்டா அவரெல்லாம் ரொம்ப படிச்சவரு, பெரிய விஞ்ஞானி. சொன்னா சரியா தான் இருக்கும். அதையே நீயும் சொல்லிடு.

ஆனா NASA விஞ்ஞானிகள்லாம் 2019 ல ஒரு பெரிய விண்கல் பூமில விழுந்து உயிரினம்லாம் அழிஞ்சிடும்னு சொல்றாங்களே!

அப்படியா ? அது கூட உண்மையா இருக்கலாம் அவங்களும் படிச்சவங்க தான.

ஆனா இந்த நாஸ்ட்ராடமஸ் னு ஒருத்தர் 2016 க்கு அப்புறம் இந்தியா தான் வல்லரசுன்னு 500 வருஷத்துக்கு முன்னாலேயே அடிச்சு சொல்லி இருக்காரே!

ஓஹோ... அவர் பெரிய ஆளாச்சே.

ஆமா... ஆனா ஒரு சில பொருளாதார வல்லுனர்கள் 2015 ல சீனா தான்னு சொல்றாங்க.

டேய் வேண்டாண்டா... டீக்கு வேணும்னா என்னோட அக்கவுண்ட்ல எழுதிக்கோ. முடியல.

இருந்தாலும் இந்த போரிஸ்கா னு ஒரு செவ்வாய் கிரகத்து பையன் சொல்றத பார்த்தா 2012 லேயே ஒரு பெரிய இயற்கை பேரழிவு இருக்கும் போல தெரியுதே!

தப்புதாண்டா... இந்த ஒரு தடவ மன்னிச்சி விட்டுடேன்...

அதுக்கில்ல மச்சான் நம்ம சிதம்பரம் என்ன சொல்றார்னா 2010ல...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

4 கருத்துகள்:

kummalam சொன்னது…

முதல்ல டி கட பாக்கிய குடுங்க தம்பி... இந்தியா வல்லரசு ஆகு தன்னு அப்புறம் பாக்கலாம்....

ஜேடி சொன்னது…

பரோட்டா வாங்கி குடுத்து புரளி பேசறது கேள்விப்பட்டு இருக்கேன் ...ஆனா டீ வாங்கி குடுத்து தாலி அறுக்கிறது புதுசா இருக்கு..

சுதாகர் R சொன்னது…

//
kummalam கூறியது...

முதல்ல டி கட பாக்கிய குடுங்க தம்பி... இந்தியா வல்லரசு ஆகு தன்னு அப்புறம் பாக்கலாம்....
//

அத ஏன் கேக்கறீங்க தல... அட்டண்டென்ஸ் நோட்டு மாதிரியே அந்த அக்கௌன்ட் நோட்டையும் நம்ம சங்கத்து சிங்கம் ஒண்ணு ஆட்டைய போட்டுடுச்சி... அடுத்த நோட்ட அந்த டீக்கடைல சங்கிலிய போட்டு கட்டி வச்சிருந்தாய்ங்க...

சுதாகர் R சொன்னது…

வரவுக்கு நன்றி ஜேடி...

// டீ வாங்கி குடுத்து தாலி அறுக்கிறது புதுசா இருக்கு.. //

நம்மள பத்தி தெரிஞ்சிருந்தும் அவங்க கேக்கும்போது நாம என்னங்க பண்ண முடியும் ? நமக்கும் நம்ம நண்பர்கள விட்டா யாரு இருக்கா சொல்லுங்க...