புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

செவ்வாய், 21 அக்டோபர், 2008

ஐ.டீ படித்துறை பாண்டி

காட்சி : 1 இடம் : பிராஜக்ட் சைட்
வழக்கம் போல எல்லா டீம் ஆளுங்களும் காலைல வந்ததும் மெயில் செக் பண்றது, ஷேர் மார்க்கெட் பாக்கறது, மார்க்கெட் நிலவரத்தை ரெம்ப டீப்பா டிஸ்கஸ் பண்றது, டீ குடிக்கறது, டீ குடிக்கற மத்தவங்கள கடிக்கிறது, டிஸ்கசன் பண்றேன்னு கும்பலா ரூம்ல கதவ சாத்திட்டு தூங்கறதுனு ரெம்ப ரெம்ப பிசியா இருப்பாங்க.
ஒரு சிலர் ஸ்க்ரீன்ல வெறிச்சு பார்த்திட்டு வேகமா டைப் பண்ணிட்டு இருப்பாங்க கிட்ட போய் பார்த்தா வேற என்ன சாட் தான்......இப்படியே டைம் பாஸ் பண்ணிட்டு ஒரு மூணு மணி வாக்குல தான் பாதி பேரு சுய நினைவுக்கு வருவாங்க மீதி பேரு தூக்கத்த விட்டு எழும்புவாங்க. .......ச்சே வொர்க்லொட் ரொம்ப ஜாஸ்தி..... ஐ.டீ ல வேலை பாக்கறது ரொம்ப டென்ஷன் பானு ஓவரா சலிச்சிக்குவாங்க.....

கட்சி : 2 நேரம் : ஆபிஸ் முடியும் நேரம்.
டீம் லீட் டீம் மெம்பெர்களை கூப்பிடுறாரு.......கைஸ்...வி வில் மீட் அட் 4.30

டீம் லீட் : வாட் ஹெபன்ட் டு தோஸ் டெவலப்மன்ட்ட்ஸ் ? (டீம் வழக்கம் போல முழிக்கிறார்கள் )
டீம் லீட் : ஓகே கம் வித் மீ ...( சொல்லிட்டு ரூம் விட்டு வெளிய வந்து பார்க்கிறார்)
(வெளியே ஒரு டெவலப்பர் உக்காந்து வேலை பாத்துட்டு இருக்கார்)
ஹே யு..... அவன்கிட்ட போய் ஒரு டெவலப்மன்ட் பண்ணனும்னு சொல்லிட்டு வா....
டீம் மெம்பர் : (டெவலப்பர் கிட்ட போய்) ஹாய்... சார் ஒரு டெவலப்மன்ட் பண்ண சொல்லறார்.
டெவ் : ஹே போப்பா எப்போ வந்து கேக்கற பண்ண முடியாது....
டீம் மெம்: சார் அவரு பண்ணமாட்டேன்னு சொல்லறார்.
டீம் லீட்: நான் சொன்னேன்னு சொன்னாயா ?
டீம் மெம் : (டெவலப்பர் கிட்ட போய் ) சார் பண்ண சொல்லறாரு பா
டெவ்: அவங்க அப்பன் வந்தாலும் பண்ண மாட்டேன்.

( டீம் லீட் டென்ஷன் ஆகி டெவலப்பர் கிட்ட வேகமா வந்து )
டீம் லீட் : நான் யாருன்னு தெரியும் ல....... டீம் லீட் யு நோ.....
டெவ்: டீம் லீட் எல்லாம் தெரியாது..... பங்க்சனல் ஸ்பெக் கொடுங்க.....அப்பத்தான் யாரா இருந்தாலும் டெவலப்மன்ட் பண்ணுவேன்....
டீம் லீட் : அய்யோக்கிய பயலே.....யாரை பார்த்து பங்க்சனல் ஸ்பெக் கேக்குற... நான் வாழ்க்கைல பங்க்சனல் ஸ்பெக் யாருக்கும் கொடுத்ததில்ல அப்படி கொடுத்தாலும் அதைவச்சு இதுவரைக்கும் டெவலப்மன்ட் எதுவும் நடந்ததில்ல....என்ன பார்த்து என்ன கேள்வி கேட்டுட்ட பிச்சு புடுவேன் பிச்சு.....ராஸ்கல்......
(என்று திட்டியபடி வேகமாக ரூம்க்கு போகிறார் பின்னால டீம் மெம்பர்ஸ் போறாங்க )
டீம் மெம்: என்ன சார் நீங்க அவன பண்ண வச்சுடுவிங்கனு பார்த்தோம் ஆனா இப்படி ஓடி வந்துட்டிங்க....
டீம் லீட்: இப்படி பப்ளிக்கா அவங்க கிட்ட பேசி பேசி அசிங்கப்பட்டது போதும்... டேய் இப்போ என்ன பண்றீங்க மெதுவா எட்டி பாருங்க.... அவன் லேப்டாப் ஓபன் பண்ணி வொர்க் பண்ண ஆரம்பிச்சான்னா அவன் நமக்கு அடிமை.......... மிட் நைட் வரைக்கும் அவன யூஸ் பண்ணிக்கலாம்.....இல்ல அவன் லேப்டாப் க்ளோஸ் பண்ணிட்டு கிளம்பினான்னா நாம அவனுக்கு அடிமை ...... போய் மொத்தமா கால்ல கைல உலுந்து அவனை கெஞ்ச வேண்டியதுதான்... ....
டீம் மெம்: இது உங்க ஆட்டைல புது ஆட்டையா இருக்கே சார்.......
டீம் லீட்: அதனால தான் நான் டீம் லீட்ஆ இருக்கேன் நீங்க எல்லாம் மெம்பரா எங்கிட்ட இருக்கீங்க போய் பாருங்க......
(டீம் வெளியே எட்டி பார்க்க டெவலப்பர் கடைய சாத்திட்டு கிளம்பிட்டு இருக்கறார் )
டீம் மெம்: சார் நீங்க சொன்ன மாதிரி அவன் கிளம்பிட்டான் சார்.....
டீம் லீட்: ஓடுங்க ஓடுங்க.... அவன உடாதிங்க.... எடுடா அந்த பொரைய.......பொரையும் ஒரு டீயும் கொடுத்து அவன மடக்குங்க.... ஓடுங்க.......
( டீம் லீட் சொல்லிக்கொண்டு டெவல்ப்பரை நோக்கி ஓட பின்னால் டீம் மெம்பெர்ஸ் ஆர் ஆல்சோ பாலோயிங்...... ஆஸ் யூசுவல்......)


இன்னும் வரும்.................. ஆனா........