புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

செவ்வாய், 14 அக்டோபர், 2008

மேதை படத்தின் கதை சுருக்கம்......

ராமராஜன் இந்த படத்தில் இன் அண்ட் ஆஸ் மேதையாக நடிக்கிறார் இல்லை வாழ்கிறார்......
மேதை ஒரு குக் குக் கிராமத்தில் பிறந்து வளர்கிறார்......அவருடைய அறிவை கண்டு சுத்துப்பட்டு பதினெட்டு கிராமங்களும் வியக்கிறது..... அவருக்கு பதினெட்டு வயதாகும் போது அவரே ஊரில் ஒரு கல்லூரி அமைக்கிறார்.... அவர் தான் பிரின்சிபல், புரொபஸர், எல்லாம்..... ஓய்வு நேரத்தில் கல்லூரி ஆய்வு கூடத்தில் அராய்ச்சி செய்து ஒரு புதிய பொருளை கண்டுபிடிக்கிறார்.....
இதற்கு இடையே முதலாண்டு படிக்கும் குப்பம்மா, குருவம்மா, போன்ற அழகிகள் அவரை லவ் பண்ணுகிறார்கள்.....


ரெண்டு குத்து சாங்க்ஸ்......

ஆனால் மேதை பக்கத்து ஊரு நாட்டமை பொண்ணை (நைன்த் பெயில்) காதலிக்கிறார்.... பக்கத்து ஊரு நாட்டாமை மகனும் இவரை போலவே கல்லூரி ஆரம்பித்து போட்டி போடுகிறார் ...இவரது கண்டுபிடிப்பு பார்முலாவை திருடி கொண்டு பிச்சாவரத்துக்கு ஓடுகிறார்.....

நாலு பைட் ........

கப்பல், விமானம், ராக்கெட் சேசிங் சீன்ஸ் உண்டு.

அதை வில்லன் இடமிருந்து கைப்பற்றி மேதை தன்னுடைய கண்டுபிடிப்பை ஐ.நா சபையில் நிருபித்து காட்ட ஜெனிவா போகிறார் அங்கே காட்டெருமை இவரை விபத்தில் இருந்து காப்பற்றுகிறது... இங்க ஒரு சாங்.....(பேச்சி...பேச்சி என் எருமை உள்ள பேச்சி .....வாடி வாடி .....காட்டெருமை பேச்சி) பிறகு .......

ஐ.நா சபையில் கண்டுபிடிப்பை ஓபன் செய்கிறார்........ அனைத்து நாட்டு அறிஞர்களும் ஆச்சரியத்தில் வையடைத்து போகிறார்கள்..... அப்போது திடீரென்று இண்டேர்போல் போலீஸ் வந்து மேதையை கைது செய்கிறது......(எதற்கு என்று கிளைமாக்ஸ்ல தான் தெரியும்)
ஜெயிலிலும் அவர் தன் ஆராய்ச்சியை தொடர்கிறார்......

அதற்காக கிருஷ்ணா புராணம், ராமாயணம், மகா பரதம், கந்த சஷ்டி கவசம், மருதம், சரோஜா போன்ற அறிவியல் நூல்களை அட்டை டூ அட்டை படிக்கிறார்......
அவர் ஜெயிலிலிருப்பதை கேள்விப்பட்டு ஊரு நாட்டாமை பதினெட்டு பட்டி மக்கள், முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உட்பட எல்லாரும் கூடி உண்ணாவிரதம் இருக்கிறார்கள்...............
இங்கே உலகையே உருக்குற மாதிரி ஒரு தீம் மியூசிக் தினா போட்டுருக்கிறார்

( இதற்க்கு அவருக்கு கண்டிப்பா ஆஸ்கார், மாருதி கார், எல்லாம் கிடைக்கும் )
கிளைமாக்ஸ் காட்சியில் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க இண்டேர்போல் அவரை விடுதலை செய்ய...

"வாங்கையா மேதை அய்யா ...........

உங்க வலி பார்த்து நின்றோம் அய்யா...... "

என்று மக்கள் பாட்டு பாட தியேட்டரில் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டுவார்கள்...... (தாய் குலங்களின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் ஓடும்)
அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஜெயிலில் தள்ளிய கண்டுபிடிப்பு தான் என்ன என்று மேதையை கேட்க பெட்டியை திறந்து அதை வெளியே எடுத்துகாட்ட ............ அவர் காட்டியது வேறொன்றும் இல்லை.....'மௌஸ்' (எலி)....... இந்த கருவியை பயன்படுத்தி கீ போர்டு இல்லாமல் மௌஸ் பாடில்... அதன் மூஞ்சியை தேய்த்தால் கர்சர் நகரும் என்ற கண்டிபிடிப்பை......... பார்த்து பொறாமை பட்டு அமெரிக்காவின் சதியால் என்னை ஜெயிலில் அடைத்தார்கள்.... என்று சொல்ல.......முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உட்பட எல்லாரும் மயங்கி போகிறார்கள்.......
இந்த மாபெரும் சயன்ஸ் பிக்க்ஷன் படத்துக்கு கண்டிப்பாக நோபல் பரிசு கிடைக்கும் என்று வெளிநாட்டு தூதுவர் ரகசிய தகவல் சொன்னதாக மேதை ராமராஜன் எருமையுடன் ச்சே....பெருமையுடன் கூறினார்.
பின் குறிப்பு : இது வெறும் கதை சுருக்கமே முழு கதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அல்லது தைரியம் உள்ளவர்கள் வெள்ளி திரையில் காண்க .


முன் எச்சரிக்கை : இந்த படம் ரிலீஸ் ஆனால் ராமராஜன் தேர்தலில் போட்டியிட்டு முதல்வர் ஆகக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சின்னாளபட்டி சிட்டு குருவி ஜோஷியர் கூறியிருப்பதாக ராமராஜன் அகில உலக ரசிகர் மன்ற செயலாளர் அரைக்கால் டவுசர் அப்புசாமி பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை: