நேத்தி கும்மு கும்முநு கும்மி அடிச்ச அப்புறம்... இந்தியா வல்லரசு ஆகும்னு தெரிஞ்சிக்கிற ஆர்வத்துல நேத்தி சிந்தி சிதறுன மக்களை இன்னிக்கி பொறிக்கி எடுத்து கேள்விய போட்டோம்.... இன்னிக்கிn முதல்ல நாட்டமை நரசிம்மன் கிட்ட கேடோம்... கேள்வி கேட்டவுடனே ஆள காணோம் எங்கடாநு பார்த்தா.... மின் அஞ்சல் அதாங்க மெயில் அனுப்ப போய்ட்டாரு... அதாவது இந்த விசயத்த எல்லாருக்கும் தெரிவிக்கிராராம்.... நடதுங்கட... நடத்துங்க...அப்பனு பார்த்து ஒரு தொலைபேசி அழைப்பு .... எதிர் முனைல நம்ம பய... சரி அவன்ட கேட்போம்னா நீ கொஞ்ச நாள் இந்தியா பக்கம் வராம இரு இந்தியா சீகிரமம் வல்லரசு ஆயிடும்னு அசிங்க படுத்திட்டு போன வெச்சிடான்...... அந்த சமயம் பார்த்து நம்ம XI சான்றிதழ் பெற்ற வொர்க்ப்லொ காங்சுல்டன்ட் வந்தாரு.. சட்டுன்னு அவர்ட கெட்ட.. இந்தியா வல்லரசு ஆயிட்டாளும் அப்படின்னு ஒஎஉ பெரிய சலிப்பா சலிச்சி கிட்டு போய்ட்டாரு...
அந்த நேரம் பார்த்து உள்ள வந்த மேலாளர்.... ஏன்டா குடுத்த வேலைய செய்யாம இங்க எங்கடா சுத்தி கிட்டு இருக்கனு சொல்லி ஆபீஸ் ரூம் அதாங்க சிவாஜி படத்துல வருமே அங்க கூட்டி கிட்டு போய்ட்டாரு... இந்தியா வல்லரசு ஆகுமா ஆகுமாநு என் கேள்வி என்ண்டயே திரும்ப திரும்ப கேட்டு கும்மி அடிச்சிட்டாரு..... அனா வளைய மக்களே.... கருதாவதாரம் சொல்லியோ... டி கடைல புரளி பேசியோ இந்தியா வல்லரசு ஆவாது..... நம்ம நம்ம வேலைய மட்டும் பர்திருந்தோம்னா இந்தியா எப்போவோ வல்லரசு ஆயிருக்கும்.... இனிமே ஆவும்னு நம்பிக்க இருக்கா என்ன.......
ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
உங்க கிட்ட இருந்து இன்னும் நெறைய எதிர் பார்க்கறோம்...
எப்படி நம்ம எல்லாரும் சேர்ந்து இந்தியா வல்லரசு ஆகும்னு எதிர் பாக்குற மாதிரியா?
யானைக்கு தும்பிக்கையும் மனுஷனுக்கு நம்பிக்கையும் ரொம்ப முக்கியமுங்க...
ஆரம்பிச்சுடாங்கள்ள.....
இந்தியா வல்லரசு.....ஆகா....என்ன ஒரு அருமையான கற்பனை....
சரி இப்போ வல்லரசுன்னு சொல்லிக்கிற நாடுகளை நம்ம நாட்டோட கொஞ்சம்........
அதுக்கு முன்னால வல்லரசு என்றால் என்ன? எப்படி ஒரு நாட்டை வல்லரசுனு சொல்லராங்க ?
௧. அரசியல் ஸ்திரத்தன்மை.
௨. மக்களின் வாழ்க்கை தரம்.
௩. சமுதாய கட்டமைப்பு.
௪. அணு ஆயுத பலம்.
௫.நாணயத்தின் மதிப்பு (பண வீக்கம்)
இப்படி பெரிய பட்டியல் நீண்டு கிட்டே போகும்...(நாம இதோட நிறுத்திக்குவோம்...)
இப்போ என்ன என்ன நாடுகள் இந்த வல்லரசு லிஸ்ட் ல இருக்கு?
( மா.நன்னன் மாதிரி அரம்பிசுட்டான்னு நினைகாதீங்கப்பு......)
அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, சீனா.....அப்புறம்.....
இப்ப சொல்லுங்க பாஸ்ஸு......இந்தியா இந்த லிஸ்ட் ல சேருமா ?
சீனாவுல.....ஒலிம்பிக் நடந்துச்சு.....நம்ம தூர தரிசனத்துல பார்த்தீங்கள்ள....
அத பார்த்துட்டு....உலக போலீஸே(உலக நாயகன் மாதிரி ...அமெரிக்கா உலக போலீஸ்ஸூ )..... அல்லு உட்டு....ஆடிபோச்சு.....
நம்ம ஆளுங்க மூணு மெடலு வாங்கறதுகுள்ள ..மூச்சுத்திணறி...டவுசர்...அவுந்துடுச்சு.....
இதுல நம்ம அரசியல் வாதிங்க வல்லரசு ஆகிரோம்னு...சொல்லி வாக்கு சேகரிக்க அரம்பிசுடானுங்க..... விஜயகாந்த் மாதிரி வல்லரசுனு படம் எடுத்து வல்லரசாகிட்டோம்னு வேணா சொல்லிக்கலாம்......
ஒலிம்பிக் நடக்கும்போது....பீஜிங் ல ஒரு நாளைக்கு ஒற்றை எண் உள்ள வாகனங்களும் அடுத்த நாள் இரட்டை எண் உள்ள வாகனங்களும் ஓட வேண்டும்னு சட்டம் கொண்டுவந்து அதை அமல் படுத்தியும் காட்டினார்கள்....
இங்கே நம்ம ஊரில் ...நம்பர் இல்லாத வாகனங்களை தடுக்க சட்டம் கொண்டுவந்தாலும் அதை நடைமுறை படுத்த ஐம்பது வருடங்கள் ஆகலாம்..(சம்பந்தப்பட்டவர்கள் ஆக்கலாம்)
இப்போ சொல்லுங்க...?
டு பி கண்ட்..........
பப்....பப் .....தம்ப்ர்ரிரி...
கும்மலதுல குஜாலா ஒரு மேட்டர்ரா....எடுத்து உடுங்க...
எழுதறவங்களுக்கும் படிக்கறவங்களுக்கும் ஒரு கில்மாவா....இருக்கும்ல...?
கருத்துரையிடுக