மக்கா..........தேர்தல் வருது..........நாடகங்கள் அரங்கேற தொடங்கியாச்சு....... முழிச்சிக்கோங்க..... அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் , திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி , விடுதலை சிறுத்தைகள், தேசிய மக்கள் முன்னேற்ற கழகம் , காங்கிரசு ..............இப்படி முன்னேற்ற கழகங்கங்களும், கட்சிகளும் தங்கள் தேர்தல் வியூகங்களை ரூம் போட்டு , வீடு கட்டி , தண்ணி போட்டு யோசிக்க ஆரம்பிச்சாச்சு........ இதுல நடுவண் அரசுக்கு என்ன கூட்டணி மாநில அரசுக்கு என்ன கூட்டணி, யாரு காசு அதிகமா கொடுப்பா ...... ஒன்னு வாங்கினா ரெண்டு இனாமா கிடைக்கற மாதிரி எதை விட்டு கொடுத்து (மானம் மரியாதை உட்பட ) எதை பெருவதுனு ரெம்ப ஆலோசனை நடத்திட்டு இருக்காங்க....... ஒருத்தனை ஒருத்தன் பள்ளி குழந்தைகளை போல குறை சொல்லுவது .....ஒருவன் மீது ஒருவன் சேற்றை அள்ளி வீசிகொள்வது என்று அரசியலில் சகஜம் என்று ஆகிவிட்ட காரியங்கள் அருமையாக நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது..............
இப்போது இருக்கும் தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் எல்லாருக்கும் எல்லாரை பற்றியும் நன்றாக தெரியும்.........இது அரசியல் வாதிகளுக்கும் தெரியும் ...........அதனால் தான் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு " டெலிவிசன் ரேட்டிங் பாய்ண்ட் " பெறுவதற்காக என்ன என்ன விளம்பர உத்திகளை கையாளுகிறார்களோ அதை போல .....சில்லரை தனமான உத்திகளை கையாண்டு இடங்களை பெறுவதில் தொடங்கி ஓட்டுவாங்கி ஆட்சியை பிடிப்பது வரை முழுக்க முழுக்க வியாபாரமாக செய்கிறார்கள் ............ சோப்பு விளம்பரம் , ஆடை விளம்பரம் போல நடிகைகளை , நடிகர்களை வைத்து விளம்பரம் செய்வது ......சில நடிகர்களை (அசிங்கமாக) பேச வைத்து விளம்பரம் செய்வது ......சண்டை போடவைத்து விளம்பரம் தேடுவது ......... என தொடங்கி அவர்களை கட்சி ஆரம்பித்து ஆட்சியை கையில் கொடுக்கும் வரை எல்லா கொமாளிதனங்களையும் செய்தாகிவிட்டது........போதும்....... யாருக்கும் யாரும் சோறு போட முடியாது உன்னுடைய சோறு உன் உழைப்பால் மட்டுமே கிடைக்கும் .................. திருந்துங்கள் .....யோசியுங்கள்.....
ஏன் நீங்களோ இல்லை உங்கள் குடும்பத்தாரோ வேலைக்கு போக வேண்டும் ? ....... பிழைப்புக்காக
ஏன் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க வேண்டும் ?........ பிழைப்புக்காக...
ஏன் ரஜினி காந்த் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் ?...... பிழைப்புக்காக
ஏன் கவியரசர் கவிதை எழுதவேண்டும் ?......... பிழைப்புக்காக
ஏன் ஷங்கர் படம் எடுக்க வேண்டும் ? .......பிழைப்புக்காக
ஏன் நானோ நீங்களோ கட்சி கோடி பிடிக்கவேண்டும் ? .....பிழைப்புக்காக
இப்படி நீங்கள் உங்களை கேள்வி கேட்டுபாருங்கள் ......
நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றுதான்...... உங்கள் ஊரில் யார் நல்லவர் ?
சட்ட சபை உறுப்பினர் வேலையை யார் ஒழுங்காக பார்ப்பார்? .......
உங்கள் தொகுதிக்கு என்ன செய்யவேண்டுமோ அதை யார் செய்வார் ? என்று பார்த்து ஓட்டு போடுங்கள் ........
அவர் எந்த கட்சி ஆகா இருந்தாலும் பரவாயில்லை ............ ஆளும் கட்சியானாலும் எதிர் கட்சி ஆனாலும் தொகுதிக்கு செய்யமுடியும் ....... எடுத்துகாட்டுகள் கொடுக்கலாம் ஆனால் கட்சி சார்பாக ஆகிவிடும் ...........அரசியல் வாதிகளை உண்மையிலேயே சிந்திக்க வைக்க செயல் பட வைக்க இதுதான் ஒரே வழி .. எனவே சிந்தியுங்கள் ....... நாம் பட்டது போதும் ...திருந்துங்கள் ......மாற்றத்தை ஏற்படுத்துங்கள் ..... நமது சந்ததியாவது அனுபவிக்கட்டும் உண்மையான சுதந்திரத்தை!
திங்கள், 6 அக்டோபர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக