"நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
அப்படி நான் வர முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்க முடியாது.....! "
எப்படி பன்ச் டயலாக் நல்லாருக்கா ? இது அரசியலுக்கு வரவழைக்க முயற்சித்து ரசிகர்கள் செய்த அடாவடி கூத்துகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தலைவர் கொடுத்த பன்ச் டயலாக் ஆச்சே.........
அண்ணே..... ரசிகர்கள் அப்படி என்ன அடாவடி செஞ்சாங்க ?
என்ன சும்மா.....லட்ச கணக்குல கை காச போட்டு
<>அவரு பெயரில் கட்சி.
<>கட்சிக்கு கொடி, சின்னம்.
<>தமிழ் நாடு முழுவதும் போஸ்டர்.
இப்படி சின்னதா(!?) தலைவருக்கு அவங்க ஆர்வத்த காட்டினாங்க.....
இதெல்லாம் ஒரு நாளோ இல்ல ஒரு வாரத்திலோ முடியற மேட்டர் இல்லையே...
ஆமாடா.....ஆனா.......இவ்வளவு நடந்து முடியற வரைக்கும் தலைவருக்கு எதுவுமே தெரியாது பாவம்.......
பின்ன அவருதான் வெளி நாட்டுல 'ஐஸ்' போட்டு ஜூஸ் குடிச்சிட்டு எந்திரத்தனமா சூட்டிங் ல பிசியா இருக்காரே.........
ரசிகர்களை மீட் பண்றேன் மீட் பண்றேன்னு சொல்லிட்டு அவரு பாட்டுக்கு அவரு வயித்து பொழப்ப பாக்கறாரு.....இந்த பொழப்பத்த அப்பாவிங்க அவர நம்பி என்ன என்னமோ கனவு கண்டுட்டு இருக்காய்ங்க......(எல்லாம் அவனவன் ஆட்டைய போடத்தான்)...
அவரு எப்போ மீட் பண்றேன்னு சொன்னாரு...... இதுக்கு முன்னால எடுத்த படம் கும்ம்னு குத்தவச்சு..குப்ரடிச்சி கும்மியாடிசிடுச்சி இல்ல......அதனால ரசிகர்கள உற்ச்சாகபடுத்த அப்படி சொன்னாரு அதபோய் தப்பா எடுத்திட்டு இப்படி பண்ணலாமா? ( அடுத்த படத்துக்கு பாலு ஊத்தணும் இல்ல)
இருந்தாலும் அவரு அரசியலுக்கு வர்றதபத்தி மறுபடியும் குழப்பக் கூடாது......
டேய் லொள்ளு தலையா.....நீ என்ன குட்டையா குழப்பறதுக்கு...... அவரு உன்ன என்னடா கொழப்பிட்டாரு ?
இல்லண்ணே.....ஒண்ணு வரேன்னு சொல்லணும் இல்ல வரலைன்னு சொல்லணும்.... இப்படி ரெண்டுங்கெட்டானா பன்ச் டயலாக் சொன்னா நாங்க எல்லாம் என்ன பண்றது... ?
ம்ம்ம்....ரெண்டு இட்லியும் கொஞ்சம் கெட்டி சட்னியும் வச்சு தின்னு........ அவங்க அவங்களுக்குன்னு சுயமா சிந்திக்க செயல்பட உரிமை இருக்குல்ல..... அவரு சிந்திக்கிறாரு அவரு தெளிவா இருக்காரு........ உனக்கெல்லாம் எப்பதான் அறிவு வருமோ....!!! அவரு கொளப்பறார்.....அவரு கொளப்பறார்....என்று....கூப்பாடு போடற உன்னமாதிரி மடையனுங்க எப்பதான் திருந்தி இருக்கறவங்கள கொளப்பாம இருக்கபோறீங்க.......
தமிழ் நாட்ட அவரு அரசியலுக்கு வந்தாதான் காப்பத்த முடியுமா? இல்ல தமிழ் நாட்ட நடிகர்கள் மட்டும் தான் காப்பத்த முடியுமா....என்னடா இது கேனத்தனமா இருக்கு.......
சினிமா ஒரு தொழில் தானடா..... நீ டீ கடைல வேலை பாக்கிறா மாதிரி, ஸ்கூல் ல வாத்தியார் வேலை பாக்கற மாதிரி, கூலி வேலை பாக்கற மாதிரி அதுவும் ஒரு வேலை தானடா..... நீ ஒரு கூலி தொழிலாளியை அரசியலுக்கு கூப்பிடுவியா? வாத்தியாரை அரசியலுக்கு கூப்பிடுவியா? சரி.....இவரு ஆட்சிக்கு வந்தா பட்ஜெட் எப்படி போடுவாரு, திட்டம்னா என்னன்னு தெரியுமா? ......
அதெல்லாம் அதிகாரிகள் போடுவாங்கன்னே.........
அப்போ இவரு என்ன பண்ணுவாரு அவங்களுக்கு விளக்கு பிடிப்பாரா? அதுக்கு ஏண்டா அவரு வரணும் .....நான் , நீ, இந்த நாட்டுல இருக்குற யாரு வேனாலும் வரலாமே......
அடுத்த தலைமுறையாவது திருந்தட்டும்டா.......... பல நாடுகள்ல சினிமாவே இல்லை....அதனால அங்கே அரசியலே நடக்கறதில்லையா? இல்ல அங்கெல்லாம் நல்லாட்சி நடக்கலையா?
போயி....பொழப்ப பாருங்கடா......குழந்தை குட்டிகள படிக்கவைங்கடா......குடும்பத்த மொதல்ல காப்பத்த முயற்சி பண்ணுங்க அப்புறம் நாடு, நடிகர்களை எல்லாம் பார்க்கலாம்........
வாழ்க தமிழ்.....
1 கருத்து:
"நான் வாந்தி எடுத்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி நான் வாந்தி எடுக்க முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்க முடியாது......."
கருத்துரையிடுக