அண்ணே...அண்ணே.....வாங்க பொங்கல் போடலாம் (என்னடா.....வாங்க பழகலாம்னு சிவாஜி ல கூப்பிடறமாதிரி கூப்பிடுறானே....வில்லங்கத்த விடிய காத்தால கொண்டுட்டு வரானேன்னு ....ஜெர்ர்க்கு ஆகிறாரு தலை என்று செல்லமாக அழைக்கப்படும் குருடாயில் குரு).
அப்புறம் தான் சொல்லறான் இது வெண்பொங்கல், சக்கரை பொங்கல் இல்லானே....இது bloggu பொங்கல்னான்.......
அடேய்....நார்னியா தலையா ஏண்டா காலங்காத்தால உன் டார்ச்சற எங்கிட்ட ஆரம்பிக்கற…....
இல்லைங்க்னே..... பொங்கல்ல ரெண்டு டைப் இருக்குனே.....பசங்க பொண்ணுங்க கூடவோ ...இல்ல பொண்ணுங்க பசங்க கூடவோ மொக்கை போட்டா அதுக்கு கடலைன்னு சொல்லுவாங்க.....
அதுவே …பசங்க, பசங்க கூடவோ , இல்ல பொண்ணுங்க, பொண்ணுங்க கூடவோ பேசினா அதுக்கு பேருதான் பொங்கல்.....இப்ப புரிஞ்சுதா........
(அஹ ஹா..... ஆரம்பிச்சுட்டானே......) டேய் இதெல்லாம் யாருடா உனக்கு சொல்லித்தறது எங்கிருந்து கத்துக்கற……..
அய்யயையே.......நானே....ஒக்காந்து யோசிச்சன்னே.....அதுவும் நம்ம சுணா...விணா எழுதறத படிச்சு படிச்சு மூளை இப்படி வேலை செய்யுதுனே........
டேய் பொங்கல் பண்ணி .....அவிங்கல்லாம் ரெம்ம்ப அறிவாழிங்கடா.....நீ அவிங்க எழுதறத படிச்சுபுட்டு கொஞ்சநஞ்சம் கழண்டு போனது எல்லாம் மொத்தமா கழண்டு மெண்டல் ஆகிடபோறடா.....
சரி இப்போ என்னதான் பண்ண சொல்லற......
வாங்க டி கடைக்கு போவோம்....ஒரு மணி நேரம் பொங்கல போட்டுட்டு ஒன்னு ரெண்டு பஞ்சயதுகள பண்ணி விட்டுட்டு வருவோம்....இதெல்லாம் உங்களுக்கு புதுசா.....ஆங்.....சும்மா வாங்கன்னே...நான் பார்த்துகிறேன்.....(நீ இப்படி நான் வாங்கறதா பார்த்துட்டுதானே இருக்க....)
அடேய்.....வெண்பொங்கல் மண்டையா....எனக்கு வேலை இருக்குடா.....
அப்போ இது உங்களுக்கு வேலை இல்லையா .....பொது வாழ்கைன்னு வந்துட்டா நீங்க சொந்த விஷயங்கள்ல இருந்து கொஞ்சம் ஒதுங்கிகனும் ஆமா.........சரி வாங்க எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க........
அடேய் ஏலியன்ஸ் மூஞ்சி..........உன்கிட்ட எப்படா சொன்னேன் பொது வாழ்கைக்கு வந்துட்டேன்னு....ஏண்டா ஒரு வேட்டி கொஞ்சம் வெள்ளையா கட்டகூடாதாடா.......
போங்கண்ணே.....உங்க கிட்ட இதுதான் புடிக்காது .....தன்னடக்கம் ரேம்ம்ம்பா ஜாஸ்திண்ணே.........
சரி இன்னைக்கு எனக்கு சனி சடை போட்டு பூவு வச்சுக்கிட்டு தலைல உக்காந்துடுச்சு..........சரி வா.....
(டி கடைல ஏற்கனவே ஒரு கோஷ்டி அஞ்சு மணில இருந்து ஒரு லைன் விடாம பேப்பர பொரட்டி எடுக்கறதும்....சிக்கினவன எல்லாம் பொங்கல போட்டும் .....அனுப்பிட்டு இருந்தது இப்போ தலையும் நம்ம பொங்கல் பொன்னுசாமி (ஷார்ட் ஆ PP ) யும் அங்கே போய் பட்டரைய ...போடறாங்க)
டேய் …… தலைவருக்கு ஒரு ஸ்ட்ராங் டி , எனக்கு அப்படியே ஒரு பால் டி போட்டுக்க..........
ரெண்டு பேருக்கும் சுடு தண்ணிதான் மூஞ்சில ஊத்துவேன்....ஓடிப்போயிடுங்க........
ஏய் என்னப்பா தலைவர மரியாதையை இல்லாம பேசிட்டு இருக்க....இந்த இடத்துல கடை இருக்கணுமா வேண்டாமா ? ( பிபி கைய மடிச்சுவிட்டுகறான் )
(அஹ் ஹா.... இன்னைக்கு டி குடிக்க கூட விடமாட்டன் போலிருக்கே ....)
ஏப்பு....சின்ன பையன்......அவன விடப்பு......நீ டீ ய போடூ..........
மொதல்ல காச போடு ....அப்புறம் டி ய போடலாம் உனக்கே டி கிடையாது இதுல கூட அல்லக்கைங்க வேற.............
இந்த பொழப்புக்கு எங்கயாவது பிச்சை எடுத்து பொழைக்கலாம்.... பொளேர்ர்ர்ர்ர்ர்...........ஒரு அறை டி மாஸ்டர் கன்னத்துல விழுந்தது....... பொறிகலங்கி போய் பார்த்த முன்னால நிக்கறவன் எல்லாம் மங்கலா தெரியரானுங்க.... எல்லாரும் யாரு அடிச்சா னு பார்த்தா ...அங்கே ஒரு பிச்சகாரன் ரொம்ப கோவத்துல நிக்கறான்........... எதுக்குடா அடிச்சே....உனக்கு என்ன பய்த்தியமா...? லூசாடா நீயி..........
டேய் நாய் கரண்ட மண்டையா ....நன்னாரிப்பயலே ...... சும்மா இருந்தவன கூட்டிட்டு வந்து பிச்சகாரங்க்கிட்ட அசிங்கப்பட வச்சிடியேடா……......
டேய் நில்லுடா……....
…….நிக்கமாட்டேன் நின்னா கல்லால அடிப்பீங்க……
……. டேய் நிக்கலனாலும் அடிப்பேண்டா…………
…….எங்க போனாலும் உன்ன விடமாட்டேன்டா..... (வேட்டி அவிழ்ந்து விழுவது தெரியாமல் துரத்திக்கொண்டு PP பின்னால் தலை தலை தெறிக்க ஓடிக்கொண்டு இருக்கிறார் .....).
அந்த பிச்சைக்காரன் குடித்த டீ கு காசு சரியாக கொடுத்துவிட்டு எதிர் திசையில் அமைதியாக நடந்தான்………..
வானம் மேகமூட்டம் இல்லாமல் தெளிந்து காணப்பட்டது...........
1 கருத்து:
தலைவா எல்லாம் சரி... கும்மி கும்மு இருந்துச்சு.. ஆனா மறுபடியும் அந்த கோடிஸ்வர மகான பார்த்து, குடிச்ச டிக்கு காசு குடுத்த அந்த மானஸ்தன பார்த்து மறுபடியும், பிச்சைகாரன்னு சொல்லிடீன்களே...
என்ன இருந்தாலும் உங்க பனியில நான் ஒன்னே ஒன்னு கேட்டுக்குறேன்... உங்களுக்கு ஆந்த பிச்சைக்காரன் கிரெடிட் கார்டு வெச்சிருகான்னு கோவமா இல்ல நம்மால நல்ல டி குடிக்க முடியலனு கோவமா... ஒட்டு மொத தமிழ் நாட்டையே கும்மி அடிசிடீங்க..... நான் பழச மறக்காத காரணத்தினால் உங்களுக்கு ஆதரவு தருகிறேன்.... நாங்க கட்சியிலயும் இல்ல கோஸ்டிலயும் இல்லிங்கோவ்...
கருத்துரையிடுக