புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

புதன், 3 செப்டம்பர், 2008

சிங்கத்த சீண்டிப் பார்ப்போமா...?


நம்ம சங்கத்து பெரிய சிங்கத்த புரிஞ்சிக்கவே முடியல...

"வல்லரசு" படத்த DVD ல பார்த்துட்டு நம்மள உசுப்பி விட்டுடுச்சி... இங்க அவனவன் நைட் தூக்கத்துல பதிவு, பின்னூட்டம், முன்னோட்டம் னு பினாத்திக்கிட்டு இருக்கானுங்க...

அடிக்கடி குகை வாசல்ல போர்ட மாத்திகிட்டே இருக்கு...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி வாசல்ல த.மா.சு (DMS) கன்சல்டன்ட் னு போர்டு மாட்டியிருந்திச்சு...

அந்த சமயத்துல திடீர்னு கூட்டமா யார் யாரோ வருவாங்க... சிங்கத்த சுத்தி நின்னு கசமுசானு எதோ பேசுவாங்க... கொஞ்ச நேரத்துல பாத்தா அந்த பதினோரு பேரும் மூணு மணி நேரத்துக்கு சிங்கத்த குத்தகைக்கு எடுத்திருப்பாங்க...
ஏதாவது ஒரு ட்ரெய்னிங் ரூமுக்குள்ள சிங்கம் ஒரு PPT ய நாலாவது தடவையா ஓட்டிக்கிட்டு இருக்கும்.

சரி துக்கம் விசாரிக்கலாம்னு உள்ள போனா அதுல பாதி பேரு Youtube ல சீரியஸ்ஸா எதையோ தேடிக்கிட்டு இருப்பானுங்க. இல்லன்னா வட்டமா உக்கார்ந்து Al-Baik சிக்கன் வெட்டிகிட்டு இருப்பானுங்க...

நமக்கு சிங்கத்தோட விருந்தோம்பல் எப்பவுமே பலமா இருக்கும்... (நாம உள்ள போனதே அதுக்கு தான...)

அவிங்களும் நம்ம பலவீனம் தெரியாம "கம் ஆன் மேன்! டேக் இட்! " னு சொல்லிட்டு பின்னாடி வருத்தப்படுவாய்ங்க...

ஒரு நாள் SD ட்ரெயினிங்ல சரக்கு முடிஞ்சி போயி என்ன பண்றதுன்னு தெரியாம சிங்கத்த வந்து கூப்பிட்டாங்க...

இப்போ திடீர்னு வந்து சொல்றீங்க...?
நா இன்னும் Configuration னே ஆரம்பிக்கல...
அதுக்கப்புறம் டெஸ்ட் பண்ணனும்... Document ரெடி பண்ணனும்... ன்னு என்னென்னவோ சொல்லி பார்த்துச்சி...

"ஜோக் அடிக்காதீங்கண்ணே அதெல்லாம் மெதுவா பார்த்துக்கலாம்... இப்போ வந்து ட்ரெயினிங் மட்டும் எடுங்க போதும்" னு கூலா சொல்லி அழைச்சுட்டு போனாங்க...

"நீங்கதாங்க எங்க Quality Consultant னு அந்த ஆண்டவனே சொல்லிட்டான்னு சொல்லி சிங்கத்து வயித்துலேயே புளியை கரைச்சும், சிங்கம் அசரல... ஏற்கெனவே இருந்த போர்டுக்கு கீழேயே கொல்டி மேனேஜ்மென்ட் னு இன்னொரு போர்டு போட்ருச்சி...

அதுக்கப்புறம் இப்படி ஒரு ஆள் இருக்கற மேட்டர் நம்ம கம்பெனில எப்படியோ பரவி, 'பெரிய தல' வரைக்கும் விஷயம் போய்டுச்சு...

நேரா சிங்கத்துகிட்ட வந்த ''பெரிய தல' " ஆமா உங்க SAPல Solution Manager னு புதுசா ஒரு module வந்துருக்காமே அப்படியா?" னு பிட்ட போட்ருக்கு...

"ஆமா நானும் எங்கேயோ படிச்சிருக்கேன்" னு சிங்கம் எதேச்சையா சொல்லப்போக...

"இத ஏன் நீங்க எங்கிட்ட முன்னாடியே சொல்லல..?" னு ''பெரிய தல' செல்லமா கோவப்பட்டுச்சாம்.

மறு நாள் காலைல சிங்கம் குகை வாசல்ல சுத்தியலோட "கரைச்சல் மேலாண்மை" னு இன்னொரு போர்டு ரெடி பண்ணிக்கிட்டு இருந்துது...

சிங்கம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குதான்னு சோதிச்சு பார்க்க நெனச்ச நம்ம சின்ன தல ( அவருக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன... ) Streeing committee meeting க்கு மொத நாள் KT ரெடி பண்ணி சிங்கத்துக்கு மெயில் பண்ணிட்டு ஊருக்கே CC போட்டுட்டு லாங் லீவுல போய்ட்டாரு...

அந்த ரெண்டு வாரத்துக்கும் கம்பெனி மொபைல் போன்ல கால் வரும்போதெல்லாம் சிங்கத்துக்கு தூக்கி வாரி போடும்.

இப்போ சிங்கம் Multifunctional Consultant ஆய்ட்டதால அத வெளிநாட்டுக்கு அனுப்பி ( சவுதிக்கு இந்தியா வெளி நாடு தான...) "Solution Manager" ல டிரெயினிங் குடுக்கலாம்னு கம்பனில முடிவு செஞ்சாங்க...

சிங்கமும் " சக்சஸ் ! " னு சொல்லிகிட்டே Flight ஏறிப்போச்சு...

டிரெயினிங் முடிச்சி வந்த சிங்கம் "கண்ணன்... BASIS ல என்ன டவுட் இருந்தாலும் எங்கிட்ட கேளுங்க..." னு சொல்லிக்கிட்டு இருந்தது...

4 கருத்துகள்:

ஆண்டவர்.. சொன்னது…

பெரிய சிங்கத்துக்கு கொலைனா என்னானு அவங்க அப்பா கிட்ட கேட்டாரு
அவரு ரோட்ல போய்ட்டு இருந்தவன கூப்டு அவன் கழுத்த சீவி பெரிய சிங்கத்துக்கு கைல கொடுத்து இது தாண்டா கொலைனு சொன்னாரு...அந்த பரம்பரைல ..... வந்ந்தவருடா....!!!! சோ இதுஎல்லாம் பெரிய சிங்கத்துக்கு சாதாரணம்
அப்பு.................!!!!!

ஜேடி சொன்னது…

இதுல்ல வர சிங்கம் , சின்ன சிங்கம், சிங்ககுஞ்சு இதெல்லாம் யாருன்னு தெரியல்லா ..ஆனா அந்த சிங்கத்த அசிங்கப்படுதரீங்கன்னு நல்லா தெரியுது ...

Gows சொன்னது…

IT ல இதெல்லாம் சாதாரணமப்பா... IT கு பதிலா AT (ஆப்பு டெக்னாலஜி) நு வைக்கலாம்.. இதுல தப்பிக்க தெரிஞ்சவன் சிங்கம் தெரியாதவன் பூனை... .. ஆனா கூற வரும் கருத்து அருமை :)

Unknown சொன்னது…

சும்மா இருந்தவன சொறிஞ்சு விட்டு உசுப்பு ஏத்தி.... ஒடம்ப புன்னு பணிடீங்க......

நான் சும்மா சிஸ்டம் வச்சிக்கிட்டு ஏதோ என்னால முடிஞ்சத ப்ராஜெக்ட் கு பண்ணிக்கிட்டு இருந்தேன்.....

அப்பபோ ஜி டாக் குல டவுட் கேட்கறதும் இல்ல யாராவது டவுட் கேட்டா சொல்ரதும்னு பொழப்ப ஓட்டிகிட்டு இருந்தேன்.....

லஞ்ச் ரூம் லயும் பஸ் லயும் மத்தவங்கள லைட் ஆ.... ஓரண்டை இழுக்கறது அப்புறம் அப்பப்போ லைட் ஆ பஞ்சாயத்து பண்றதுன்னு போயிட்டு இருந்தச்சு.....

அப்போ தான் எனக்கே தெரியாம இவிங்க..அதாங்க....நம்ம .வலைவாசல்..... மற்றும் ......பணிப்பாய்வு.....ஆலோசகர்கள்.....கொக்கி போட்டாங்க............நீங்க எழுதுங்க நாங்க புப்ளிஷ் பண்றோம்னு...சொன்னாங்க..........(இதுல வேற சிங்கம் களம் இறங்கிடுசுனு...ஸ்டார்ட் பண்ணி வுட்டு).......நானும் ஏதோ புக்கர் அவார்ட் வாங்க போற மாதிரி......நம்ம்ம்பி..............

வாய்க்கு வந்தத கைவழியா... கூகிள் இண்டிக்ல இறக்கி.....அப்புறம் நம்ம கும்மாளத்துல...போட்டுவிட்டேங்க....அங்க தாங்க நம்ம இஸ்டோரில..... ட்விஸ்ட்டு

சிங்கம்னு பேரு வச்சு .... ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிச்சுடாங்க......

" வேண்டாம் இதோட நிறுத்திகிட்டா...உனக்கு நல்லது ....கொலை மிரட்டல்...... "

" கும்மாளத்தை பற்றி தெரியாத இன்னொரு பிரென்ட்.....டேய் அந்த சிங்கம் நிதாநேனு ......மெயில் போட்டு.....அவனாடா....நீய் னு......கேட்கறான்......"

அந்த அளவுக்கு.....நம்ம புகழ பரப்பு பரப்புனு பரப்பிடீங்க.....

முடிவு பண்ணிடேங்க....இனிமே நிறுத்தறதா இல்ல.....

கும்மாளம் பிக்கப் அயிடுச்சுங்கோவ்வ்..............